படம் பார்த்து கதை சொல் - 1

படம் பார்த்து கதை சொல் - 1
0

37

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும்,ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

உங்களின் கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

1 Like

:thinking::thinking::thinking: ஒரு வேளை நார்த் இந்தியன் சீரியலா பாப்பாளோ? கண்ணாடியா ஒரு புடவை… லோஓ வா ஒரு ஜாக்கெட் … இத பார்த்து அவள டார்கெட் செய்றான் ஒரு பிக்பாக்கெட்…

அத கண்டுபிடிச்ச ஊதாகலரோட மாமன் சிவத்தய்யாக்கு சிவுசிவுனு கோவம் வந்துட்டு…

ஏன் டீ நா ஒருத்தேன் இருக்கெனே கிறுக்காட்டம் உனக்கு வேற கேக்குதா முறுக்காட்டம்னு அவ அவங்கூட பேசறதெல்லாம் போட்டோவா எடுத்து காமிக்கான்

எனக்கு கிறுக்கும் வேணாம் முறுக்கும் வேணாம் அல்ரெடி வேற ஒரு சுருட்டமுடி சுந்தரத்த கல்யாணம் பண்ணிட்டேன்னு தாலிய தூக்கி காட்டுனா

மாமன் மயங்கிட்டான்
பிக்பாக்கெட் பின்வாங்கிட்டான்
சுருட்ட அவள சுருட்டிட்டு போயே போய்ட்டான்

:grin::grin::grin::grin:

ஹிஹி

என்னை யாரும் அடிக்க தேட வேண்டாம் என கேட்டுக் கொண்டு…

எஸ்கேப்

2 Likes

ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்… என்று வழக்கம்போல மூன்று முறை நீதிபதி சத்தில தட்டி சுதி சேக்க, கோயம்பேடு மார்கெட் போல சலசலத்த கோர்ட் அமைதியாகிருச்சு.

இன்னித்தி மோத கேஸ் என்னபா என்று கேட்டதும் டவாலி ஒரு தம்பதிய கூப்டவும் ரெண்டுபேரும் வந்து நிக்கிறாங்க.

கனம் கோர்டாளர் காண்டாகி அவங்கள பாத்து இது குடும்ப கோர்ட் இல்லங்க. விவாகரத்து கேஸ்லாம் இங்க பாக்கறதில்லனு சொன்னாரு.

அதுக்கு அந்த பொண்ணு சர் இது விவாகரத்து கேஸில்ல சர் கொல கேஸு சர். என் புருசன் என்ன கொல்ல பாத்தாரு சர் அவர தூக்குல போடுங்க சர் னு சொல்லுச்சு.

எடுத்து எடுப்பிலேயே தூக்கா? னு ஜட்ஜே ஜெர்க் ஆகி உன் புருசன் உன்ன கொல்ல வந்ததுக்கு சாட்சி எதுனா வச்சிருக்கியா னு கேக்க.

தெரியும் சர் நீங்க இப்டி கேப்பிங்கனு தெரியும். அதுக்கு தான் அவரு என்ன கொல்ல வந்தத படம் புடிச்சி வச்சிருக்கேன் னு சொல்லி காட்டுது.

ஜட்ஜ் மனசுகுள்ள பக்கி கொல்ல வந்தா பயந்துகிட்டு ஓடாம படம் எடுத்துட்டு இருந்துருக்குது னு திட்டிக்கிட்டே

அவ புருசன பாத்து ஏன்யா கொல்ல பாத்தனு கேக்க அவன் சொன்னத கேட்டுட்டு ஜட்ஜ் அந்த பொண்ணுக்கு தண்டனை குடுத்துட்டாங்க …

அவன் சொன்னான்…

சர் செட்டுக்கு துட்டுனு அவ க்ளப்கு போனா
கட்டைக்கு ப்ளட்டு னு அவ பின்னால நான் போனேன் சர் னு…

2 Likes

கன்னத்தில் வேகமாக விழுந்த அறையில் சுழன்று விழுந்தாள் தாரா…

ஏய் எவன்டா அவன் பின்னாடி வந்து நிற்கறது பத்தாவது டேக் போகுது இதுவும்
வேஸ்ட் தான். …

அடுத்த பொஸிசனுக்கு வாங்க…

இதுவாவது சரியா வருமா… காலையில் இருந்து கழுத்தை அருங்கறாங்க மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியாமல் மறுபடியும் கேமராவை செட் செய்தான் அந்த இளம் கேமரா மேன்.

5 Likes

அடிங் யார பாத்து இந்த கேள்வி கேட்ட? உனக்கு தேவை பணம் தானே அது உனக்கு வந்து சேரும் என்றான் அவன்

பணம் மட்டும் தான் முக்கியம்னு நினைச்சி இருந்தா உன்னை மாதிரி எங்கையாவது போயிருப்பேன்… இங்க வந்து உன்கிட்ட நிக்க மாட்டேன் என்றதும் அவனுக்கு கோபம் வந்து அவளை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் அடிக்க முடியவில்லை.

ஏய் இங்க பாருடீ நான் ஆம்பள எங்க வேணும்னா போவேன் எத்தன பொண்ணுங்க கூட வேணும்னாலும் இருப்பேன்… நீ கேக்க கூடாது போ வீடு போய் சேரு.

அவளோ என்ன சொன்ன நீ ஆம்பளையா? அது தானே உன்னை இப்புடி பேச வைக்குது? என்று ஒரே அடி சப்தமும் அடங்கியது…

அவனோ அய்யோ போச்சே போச்சே…

6 Likes

க்ளப்பில் தன் நண்பனுடன் சீட்டுக்கட்டு விளையாடிக்கொண்டிருந்த பெண்ணை அவளுடைய கணவன் ஃபோனில் அழைக்கிறான் " ஹலோ ராணி எங்க இருக்க ? நான் க்ளப்ல ப்ரண்டோட கேம் விளையாடிட்டு இருக்கேன் , அடியேய் புருஷங்காரன் இங்க வீட்ல சோறில்லாம இருக்கான் உனக்கு கேம் கேக்குதா கேமு அப்டியே ஃபோனிலயே கதச்சிட்டு க்ளப்புக்கு போனா அவரோட ஃவைப் எல்லா பணத்தையும் தோத்துத்தாங்களாம் , சோறில்லாத ப்ளஸ் பணம் போன கோபமெல்லாம் சேர்ந்து ராஜா விட்டான் பாருங்க ஒரு அறை ராணி வாய் போயிடிச்சி கோணி

2 Likes

Hahaha

2 Likes

என்னமோ…? ஏதோ…?

சூரியனின் செங்கதிர் கள் மேற்கே மறயும் நேரத்தில் …லேசான சாரல் தூவ, அந்த தென் பொதிகை காற்றிற்க்கு போட்டியாய்…

தென்காசி டூ திருநெல்வேலி சாலை யில் தனது பைக்கில் அசுற வேகத்தில் பயனித்தான் சிவா…

போற போக்கில் தனது மொபைல் மூலம் யாருக்கோ கால் செய்துகொன்டே சென்றான்…

ரிங் சென்றதே தவிற தனது அழைப்பை ஏற்றுக்கொன்டதற்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போகவே ஆத்திரமாய் வந்தது…

மொபைலை அனைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு பைக்கை மேலும் சீற விட்டான்…

அன்று காலையில் தன்னவளுடன் நடந்த சண்டை அவன் மனதை ரொம்பவும் பாதித்திருந்தது…

நேரம் ஆக, ஆக… குறித்த நேரத்திற்க்குள் செல்ல முடியாதோ? என்ற பயம் தொற்றிக்கொள்ள…எங்கே தன்னை மீறி எதுவும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் கை கால் எல்லாம் நடுக்கம் கொடுக்க பைக் அவன் கட்டுப்பாட்டை மீற ஆரம்பித்தது…

இதையெல்லாம் மீறி மீன்டும் ஒரு முறை மொபைலை எடுத்து தன்னவள் நம்பர் க்கு கால் செய்தான். மீன்டும் அழைப்பு ஏற்க்கப்படாமல் போகவே கோவத்தில் மொபைல் இருந்த கையால் பெட்ரோல் டேங்க் மீது குத்தி தனது ஆத்திரத்தை காட்டியவன்…

எதிரே வந்த திருப்பத்தயும் அசுரவேகத்தில் வந்த லாரியவும் கவனிக்க தவறினான்…

சுற்றி உள்ளவர்களின் பலதரப்பட்ட குரல் கள் காற்றில் கலந்து காதுகளின் வழியே மூளையை சென்றடையும் முன் அவன் கண்மூடிய…

அதே நேரத்தில்…


ஆள் அறவமற்ற ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த கிளப் பில் நான்கு பேர்க்கு மத்தியில் போறாடிக்கொன்டிருந்தாள் “ராஜி”…

டேய் குமார் அவளை விடாதடா இன்னைக்கு விட்டா வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என கத்திக்கொன்டே வந்தான் ஜீவா…

மேலும் இருவர் அவர்களுடன் சேர்ந்துகொள்ள அவர்களிடம் இருந்து விடுபட போறாடினாலும் கொஞ்ச நேரத்திற்க்கு முன்னால் குடித்த குளிர் பானத்தில் கலந்திருந்த மாத்திரை அதன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது…

அந்த நேரத்தில் தான் காலையில் தன் கணவன் அவளவு கூறியும் அதை மதிக்காமல் தான் சுயமாய் எடுத்த முடிவு எவளவு பெரிய முட்டாள்தனம் என புரிந்தது…

அவள் மனம் தெளிந்து கணவனின் அன்பு புரிந்த நேரத்தில் அவள் கன்னத்தில் இடியாய் இறங்கியது ஜீவா வின் வலது கை…

ஜீவா அறைந்த அறையும்…மயக்க மாத்திரை யின் வீரியமும் சேர்ந்துகொள்ள மயங்கி சரிய ஆரம்பித்தாள் ராஜி…


தன் பொன்டாட்டிக்கு தெரியாமல் பயந்து பயந்து போனில் பேசிக்கொன்டிருந்தார் அந்த சப் இன்ஸ்பெக்டர்…

பாஸ் எப்பவுமே பணம் பணம் னு அது பின்னாடி யே ஓடக் கூடாது பொண்டாட்டியோட உனர்வுகளை புரிஞ்சிக்கிட்டு அவங்க ஆசைகளையும் அப்பப்ப நிறைவேத்தனும் …

அப்போ தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் அதை விட்டுட்டு அவங்களை இங்க தனியா விட்டுட்டு …

நீங்க வெளிநாட்டுல இருந்து கோடி,கோடியா கொன்டு வந்தாலும் அதைவச்சி ஆடம்பரமான வாழ்க்கை வாழலாமே தவிர அன்பான அமைதியான வாழ்க்கை வாழ முடியாது பாஸ்…

நீங்க சொல்றது புரியுது சார் நான் அடுத்த வாரமே வேலைய விட்டுட்டு இந்தியா வர போறேன் சார் …

இனிமேல் என்னோட மனைவி சந்தோஷம் தான் முதல்ல மத்தது எல்லாம் அதுக்கு பிறகு தான் சார்…

சார் இன்னோரு முக்கியமான விசயம் நடந்தது எதுவுமே என் மனைவி “ராஜி” க்கு தெரிய வேன்டாம் சார் நான் வந்ததும் அவகிட்ட விளக்கமா சொல்லிக்கிறேன்…

குட் பாஸ் நானும் அதைதான் சொல்லனும்னு நினைச்சேன் அவங்க மயக்கத்துல இருந்ததுனால எதுவுமே தெரியாது…

அது போக உங்க பேச்ச மீறி பேஸ்புக் நண்பன தேடி போனதுனால் தான் இவளவு பிரச்சனை னு வருத்தத்துல இருக்காங்க…

அதனால அவங்க பன்னுனது தப்புனு நியாபகப்படுத்துற மாதிரி எதுவும் பேசிறாதீங்க…

இல்லை சார் நான் அப்டி பேசமாட்டேன் எனக்கு தெரியாம செஞ்சாதான் தப்பு ராஜி அங்க போறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிட்டு தான் போனா…

ஆனாலும் என் பேச்ச மீறி போனதுனாலதான் இவளவு பிரச்சனை …
இனிமேல் இப்டி எதுவும் நடக்காது சார் நான் பார்த்துக்குறேன்…

ரொம்ப நன்றி சார் நீங்க மட்டும் அந்த இடத்துக்கு சரியான நேரத்துக்கு போகலைனா என் மனைவி க்கு என்ன நடந்துருக்கும்னே சொல்ல முடியாது…

விடுங்க பாஸ் நடந்தத பேசி பிரயோஜனம் இல்லை இனி நடக்க போறத பாருங்க …நீங்க இந்தியா வந்ததும் உங்க மனைவி ராஜி யோட ஒரு நாள் என் வீட்டுக்கு வந்துட்டு போங்க. நான் உங்களுக்கு அப்பறமா கால் பன்னுறேன் …

ஓகே சார் …சார் கேக்க மறந்துட்டேன் உங்க பேர் என்ன சார்?

“சிவா” சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் என கூறி சிவா மொபைலை அனைத்து வைத்த நேரம் …

சிவா சீக்கிரமா வந்து இதை பாருங்களேன் என கத்த ஆரம்பித்திருந்தாள் சிவா வின் மனைவி “ரோஸினி”…

என்னமோ …? ஏதோ…? னு பயந்து போய் பார்த்தால் சோபாவில் அமர்ந்து டீவி யில் நியூஸ் பார்த்துக்கொன்டிருந்தாள் ரோஸினி…

எதுக்குடி இப்ப இந்த கத்து கத்துன என அவனும் அருகில் அமர்ந்து நியூஸை பார்க்க ஆரம்பித்தான்…


வணக்கம் …

இன்றைய முக்கிய செய்திகள் "தென்காசி டூ திருநெல்வேலி சாலையில் பயங்கரமான லாரி விபத்து…

லாரி ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததால் திருப்பத்தில் லாரியை திருப்பும்போது லாரி கட்டுப்பாட்டை மீறி அருகிள் இருந்த சீட்டாடும் கிளப் பில் நுழைந்தது…

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை…

மேலும் ஒரு முக்கிய செய்தி அதே கிளப்பில் இருந்த போலீசாரால் தேடப்படும் குற்றவாளி “சுப்பையா” அவன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான்…

கைது செய்யப்பட்ட சுப்பையாவும் அவன் கூட்டாளி களும் சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள் உருவாக்கி " பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது…

சுப்பையாவிடம் இருந்து பறிமுதல் செய்த மொபைல் போனில் “ஜீவா” என்ற பெயரில் போலி முகநூல் கணக்கு திறந்து இருந்தது…

ஜீவா என்ற பெயரில் தற்போது ஏதும் பொண்களிடம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளானா? என்ற கோனத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்…

மேலும் விபத்து நடந்து காவல் துறை க்கு தகவல் சென்ற பத்தாவது நிமிடம் சம்பவ இடத்துக்கு விறைந்து வந்தது மட்டும் இல்லாமல்…

அங்கே இருந்த குற்றவாளி களை உடனே அடையாளம் கன்டு அவர்களையும் கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் “சிவா” அவர்களுக்கு அவர் துறை சார்ந்த நண்பர்களிடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றது…

இத்துடன் இந்த செய்தி அறிக்கை நிறைவடைகிறது…


எப்டி மாமா வோட பவர் மொத்த தமிழ் நாடும் இன்னைக்கு என்னைய பற்றி தான் பேசும் என காலரை தூக்கிவிட்டபடி மனைவியின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான்…

அங்கே சந்திரமுகி ஜோதிகாவின் தங்கச்சியாய் அமர்ந்திருந்தாள் ரோஸினி…

(டேய் சிவா சீரியஸ் போலீஸ் ல இருந்து சிரிப்பு போலீசா மாறு அப்போதான் இப்போ நீ தப்பிக்க முடியும் என அவன் மனசாட்ச்சி எடுத்து சொல்ல)

முகத்தை பாவமாக வைத்துக்கொன்டு மனைவி யின் முகத்தை பார்த்தான் …

அப்போ நான் அவளவு தூரம் சொல்லியும் என் பிறந்தநாள் னு கூட பார்க்காம நேத்து உங்க வேலை ய பார்க்க தான் அங்க போயிருக்கீங்க…

இதுல இவரு என்னைய பார்க்க வரும்போது பைக் ஆக்ஸிடன்ட் னு பொய் வேற? என அவள் முறைக்க…

இல்லடி குட்டிமா நேத்து நான் உன்னை பார்க்குறதுக்கு தான்டா வந்தேன் நம்புடி நேத்து நான் உனக்கு வாங்கிட்டு வந்த "செங்கோட்டை பார்டர் புரோட்டா "மேல சத்தியமா…

உன்னை சீக்கிரமா பார்க்கனும் னு தான் வேகமா வந்தேன் …ஆனால் நானே எதிர் பார்க்காம அந்த லாரி காரன் அடிச்சி தூக்கிட்டான்…

கண் முழிச்சு பார்க்குறேன் லாரி அந்த கிளப் ள புகுந்து நிற்க்குது…அப்போ தான் அந்த சுப்பையா கும்பல பார்த்தேன் ஒரே அமும்கா அமுக்கிட்டேன் ல…

ஏங்க அப்போ ஒருத்தனையும் நீங்க தேடி போய் பிடிக்கலை தானா தான் வந்து சிக்கிருக்காங்க. இதுக்கு இந்த டீவிக்காரன் இவளவு பில்டப் குடுக்குறான்…

உங்கள பத்தி எனக்கு தெரியாதாங்க. சரி சரி சீக்கிரமா வாங்க சாப்டலாம்…

(டேய் சிவா என்னதான் நீ போலீஸா இருந்தாலும்…இந்த உலகமே உன்னை பாராட்டுனாலும் உன் பொன்டாட்டிகிட்ட பாராட்டு வாங்குறது ரொம்ப கஷ்டம்டா)

என அவன் மனசாட்ச்சி அவனை கேலி செய்ய…

இன்னும் என்ன யோசனை சாப்பாடு வேன்டாமா என கேட்டபடி திரும்ப வந்து நின்றால் ரோஸினி…

அவனை பார்க்காமல் தலை குனிந்து நின்றவள் அவன் எதிர்பாராத நேரத்தில் “பளார்” என அறைந்திருந்தாள் அவன் கன்னத்தில்…

தன்னை அறைந்துவிட்டு கண்கலங்க நின்றிருந்த மனைவி யின் முகம் பார்த்தே கன்டறிந்துவிட்டான் அவள் அடித்ததின் காரனத்தை…

அவளை இழுந்து மார்போடு அனைத்தவன் இனிமேல் எப்பவுமே பைக்ல வேகமா போகமாட்டேன் பேபி என இவனும் கண் கலங்கினான்…

அப்போது எட்டி பார்த்த மனசாட்ச்சியிடம் என்னடா என்னமோ என் பொண்டாட்டி என்னை பாராட்ட மாட்டானு சொன்ன?

அவளோட இந்த அன்பு போதும் இந்த உலகத்தையே திருப்பி போட்டுறுவேன்…

இனிமேல் இந்த பக்கம் வந்துராத என அதை விரட்டியவனின் போன் அடித்தது…

யாருங்க போன்ல என கேட்ட மனைவியிடம் தெரியலைடா நீ போய் சாப்பாடு எடுத்துவை நான் பேசிட்டு வாரேன் என தனியாக வந்து போனை ஆன் செய்து சொல்லுங்க “ராஜி”
என கூறினான் …

சிறிது நேர அமைதிக்கு பிறகு ரொம்ப நன்றி சார் என ராஜி கூற…

இதுக்கு எதுக்குங்க நன்றி நான் என் கடமைய தான செஞ்சேன் இங்க பாருங்க ராஜி இனிமேல் எந்த விசயத்தை யும் பன்றதுக்கு முன்னாடி யோசிச்சு பன்னுங்க…

சமூகவலைதளம் ங்குறத பொழுதுபோக்குக்கு பயன்படுத்தலாம் ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை …

அங்க நீங்க பதிவு பன்னுற ஒரு போட்டோ போதும் உங்க வாழ்க்கைய அழிக்க இனிமேல் கவனமா இருங்க…

சார் எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியலை நான் உங்ககிட்ட கம்ளைன்ட் பன்னும் போது அவங்களை கைது பன்னாம ஏன்சார் இவளவு நாள் கழிச்சு கைது பன்னுனீங்க…

நீங்க நினைக்குற மாதிரி அந்த சுப்பையா சாதாரனமான ஆளு கிடையாது அவனுக்கு அமைச்சர் ன் முழு சப்போர்ட் இருக்கு அப்போ கைது பன்னுனா எப்டியும் உடனே வெளிய வந்துருவான் அதான் இவளவு நாளா காத்திருக்க வேன்டியதா இருந்தது…

என சிவா கூறிய நேரம் சரியாக அவன் இன்னொரு நம்பர்க்கு அமைச்சரிடம் இருந்து போன் வந்தது…

நான் அப்பரம் பேசுறேன் ராஜி என காலை கட்பன்னிவிட்டு அமைச்சிரின் காலை அட்டன்பன்னி சொல்லுங்க சார் என கூறினான் …

தம்பி அந்த லாரி விசயம் என்னாச்சி தம்பி என எவளவு முடியுமோ அவளவு இறங்கி வந்து பேசினார் அமைச்சர்…

சார் இனிமேல் என் கடமைய செய்ய எந்த தடயும் பன்னாம இருந்தா இந்த கடத்தல் லாரி மேட்டர்ல உங்க பேர் வெளிய வராம பார்த்துக்குறேன்…

சரிங்க தம்பி இனிமேல் நான் உங்க வழிக்கே வரமாட்டேன் என போனை கட்பன்னினார் அமைச்சர்…

தப்பான வழிக்கு போன ஒரு பொண்ண காப்பாத்தியாச்சு…

அந்த கும்பல உள்ள தள்ளியாச்சு…

பணம் பணம்னு பொன்டாட்டிய விட்டுட்டு வெளிநாட்டுல இருந்த அந்த பொண்ணோட புருசன திருத்தியாச்சு…

ஆக்ஸிடன்ட் ஆன லாரிய வச்சு அமைச்சரயே மடக்கியாச்சு…

ஒரே கல்லுல நாழு மாங்கா …டேய் சிவா உண்மைலயே நீ பெரிய ஆளுடா என தன்னை தானே பாராட்டிக்கொன்டவன் அப்போதுதான் கவனித்தான் …

கையில் தோசை கரன்டியுடன் நின்ற தன் மனைவியை…

அப்பரம் என்ன சீரியஸ் போலீஸ் இனி சிரிப்பு போலீஸ் தான்…

நாட்டை ஆளும் மன்னன் கூட…

அடங்கிதான் ஆகவேன்டும்…

வீட்டை ஆளும் ராணி யிடம்…

இது அடிமை தனம் அல்ல…

அவள் அன்பிற்க்கு கிடைத்த பரிசு…

அன்புடன்-சரத் சரவணா …

4 Likes

Super pa :blush::heart_eyes::+1:

1 Like

:heart::heart::heart::heart::heart::heart:

Excellent Saravana

2 Likes

சூப்பர் அண்ணா பின்னிட்டிங்க போங்க :heart_eyes::heart_eyes:

2 Likes

தேங்யூ டா தமபி…

1 Like

தேங்யூ சரண்யா…

1 Like