படம் பார்த்து கதை சொல் 10

படம் பார்த்து கதை சொல் 10
0

44241797_2275040576050909_4359958963168591046_n

ஹாய் மக்களே,
நான் அடுத்த படத்தோட வந்துட்டேன். இந்த படத்தை பார்த்ததும் உங்க மனசில் தோணுற கதையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் கற்பனை வளத்தையும், வார்த்தைகளின் ஜாலத்தையும் பார்க்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேன் மக்களே.

முதல் முதலாக கேட்கிறாள் இசையெனும் பேரில் அவன் வாசித்து கொண்டு இருந்ததை ஐன்னல் வழியே…வேகமாக புறப்பட்டு கொண்டு இருந்தவளுக்கு இந்த சத்தம் எரிச்சலை தந்தது.

பல நாட்களாக கேட்டு காதை மூடியபடி திட்டித்தீர்த்தவள் தான் இன்றும் அது போலவே நினைத்து ஜன்னலை திறந்து பார்க்க… அவனை பார்த்த போது இன்று சிரிப்பு தான் வந்தது. ஆர்வக்கோளாரு என நினைத்தவள் தலையில் தட்டியபடி
ஜன்னலை மூடி விட்டு செல்ல…

ஏன் அவனுக்கு அவ்வளவு ஆர்வம் என தாயாரோடு பேசும் போது புரிந்தது. ஏனென்றால் அவனின் வேலையே பழைய பொருட்களை வாங்கி விற்பது தான் என்பது. அதிலும் இசைக்கும் பொருட்களின் மேல் ஆர்வம் சற்றே அதிகம் என்பதும் இப்படி இசைத்தே இது வரையில் பல வீடுகளை காலி செய்து கடைசியாக இங்கே வந்து இருக்கிறான் என்பதும் தெரிந்தது.

சற்றே நகர்ந்து சிறிது பஞ்சை காதிற்குல் வைத்தவள் நினைத்து கொண்டாள் இவன் இங்கும் தொடர்ந்து இருக்க போவதில்லை என நினைத்தபடி அன்றைய வேலைக்கு புறப்பட்டாள் சுகந்தி.

2 Likes

சில நாட்களாக தன் காதில் கேட்கும் இந்த இசை ஆஹா என்ன ஒரு ஞானம் என்று மெச்சி கொள்வாள் அவள்…

இதுவரை அந்த இசை வரும் திசையை அவள் திரும்பி கூட பார்த்தது இல்லை… காரணம் அவள் இருந்த சூழ்நிலை அப்படி…

வீட்டிற்கு மூத்தவள் தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு இவள் தான் குடும்ப பாரத்தை சுமக்கிறாள்…

அதனால் அவளின் சிரிப்பை கூட கட்டுப்படுத்தி வைத்திருந்தாள்…

இன்று அந்த கலைஞனை எப்படியாவது ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்று இசை வந்த திசையை நோக்கி கால்கள் நடக்க ஜன்னலின் வழியே அவனை பார்த்தாள்…

அவனையும் கண்டு விட்டாள்… கையில் கிடாருடன் அமர்ந்திருந்தான்… ஆனால் தீடீரென்று ஏதோ தோன்ற பக்கத்தில் இருக்கும் சவுண்ட் சிஸ்டத்தின் மீது தன் கவனத்தை பதித்தாள்…

அவ்வளவு தான்… அட ஞான சூன்யமே இவ்வளவு நாளும் வாசித்தது நீ இல்லையா? உன்னை போல் கலைஞன் அளவுக்கு பாராட்டி கொண்டு இருந்தேனே!! என்று யோசிக்கும் போது அவளையும் அறியாமல் மென் நகை பூத்தது…

3 Likes

யுவி பாக்யவதியிடம் பணம் கேட்டதில் அவள் கொஞ்சம் ஆடிதான் போயிருந்தாள் தன் கணவனிடம் எப்படி பணம் கேட்பதென்று.

“டேய் யுவி என்னடா நினைச்சிட்டு இருக்க? இப்ப எதுக்குட உனக்கு இவ்வளவு பணம்”

ம்க்கூம் என்று கனைத்தவன் "சத்தியமா உன்னை இல்ல கா என்று கூறி நா என்ன காசை கரியாக்கவா கேட்டேன் " என்றான் உள்ளுக்குள் முனுமுனுத்தபடி .

“என்ன சொன்ன டா , இப்போ என்ன சொன்ன சொல்லு” என்று தமக்கையவள் பக்கத்தில் வர

“நீ ரொம்ப நல்ல அக்கான்னு நினைச்சிட்டு இருக்கேன்னு சொன்னேன்”. என்றான் எங்கோ பார்த்தபடி.

"நீ… என்னை… சொன்ன நான் நம்பனும். எனக்கு 6வது படிக்கும்போதே காது குத்திட்டாங்க இப்போ வந்து நீ எனக்கு காது குத்த வேணாம் இப்போ உனக்கு இது ரொம்ப தேவையோ ஒழுங்க வேலைக்கு போய் சம்பாதிக்கிய வழிய பாரு அப்புறம் இதை பத்தியெல்லாம் யோசி ". என்று அவனை திட்ட

"தம்பிய நம்பனும் எடக்கு மடக்கா கேள்வியெல்லாம கேக்ககூடாது இப்ப இல்லனாலும் இன்னும் கொஞ்ச நாள்ல வேலைக்கு போகதான் போறேன். அதுவரைக்கும் எனக்கு பிடிச்சத செய்யுறேனே பீளிஸ் கா தம்பிக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போற நான் வேற உனக்கு ஆசை தம்பி… இப்போ தான் இதையெல்லாம் அனுபவிக்க முடியும் " என்று அக்காவினை தாஜா செய்து அக்காவின் தாடையை பிடித்து கொஞ்ச

யுவியின் வார்த்தையில் பழையநிலைக்கு மீண்டவள் “உனக்கு இப்ப எதுக்கு டா இவ்வளவு பணம்… தேவையில்லாம வெட்டி செலவ இழுத்து விடாத இப்போதான் செல்வி கல்யாணம் முடிஞ்சிது உடனே உங்க மாமாகிட்ட போய் எனக்கு காசு கொடுங்கன்னு நிக்க முடியாதுடா யுவி” என்று தம்பி ஆசைபட்டது செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக கூறிக்கொண்டிருப்பதை யுவியின் வீட்டு மாடியில் வத்தல் காயவைக்க வந்த எதிர் வீட்டு சின்னைய்யன் மகள் மலர் கேட்டு விட சாரு வெட்டியா ஊர சுத்தி ஊதாரி தனமா செலவு செய்ய பணம் கேக்குறானா… தடிமாடு மாதிரி இருக்கான் இன்னும் சம்பாதிக்க துப்பில்லாமா வீட்டுல பணம் கேட்டு நச்சரிக்கிறான் பாவம் பாக்யா அக்கா எவ்வளவு பிரச்சனையதான் சமாளிப்பாங்க… இவன் எப்பதான் திருந்துவானோ என்ற எண்ணத்துடனே தன் வீடுவந்து சேர்ந்தாள்.

அக்காவின் நிலைமையை ஒரளவு யூகித்திருந்தவன் அவளின் வருத்தமான பேச்சை கேட்டதும் தன் அக்காவின் மனநிலையை மாற்றும் பொருட்டு"சரி விடு கா சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன் மாமாவ பத்தி எனக்கு தெரியாதா . நீ வொரி பண்ணிக்காத இப்போ என்கிட்ட இருக்கிறத வைச்சி நான் பாத்துக்குறேன்". என்று அக்காவினை சரிபடுத்தி சிறிது நேரம் அவளை கேளி செய்து விளையாடியவன் எதனையும் முயன்று பார்க்கமல் தோல்வியை ஒப்புக்கொள்ள கூடாது என்ற எண்ணம் கொண்டு மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் என்று நண்பன் அரவிந்த் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவன் இரவு வரும்போது பெரிய பேக்குடன் வந்தான்…

தம்பி கொண்டுவந்த பையை பார்த்தவள் “என்னடா இது” "என்ற கேள்விக்கு

“சர்பிரைஸ் … காலைல சொல்றேன் கா” என்றவன் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டுதன் அக்கா குழந்தைகளுடன் சிறிது நேரம் பொழுது போக்கியவன் தன் அறைக்கு சென்று கண் அயர்ந்து விட்டான்…

வைகறையின் வெளிச்சத்தில் குயில்களின் குரலிலும் பொழுது புலர ஏதோ ஒரு மெல்லிய ஒலி எழும்புவதும் நிற்பதுமாக இருக்க இப்போது ஒரு பாடலாக உருப்பெற்று வர எதிர்வீட்டு சின்னைய்யன் மகள் மலருக்கு ஒரு குருகுறுப்பு யாருடா நம்ம தெருவுல இவ்வளவு நல்லா வாசிப்பது என்ற எண்ணத்துடன் தன் அறை ஜன்னலை திறந்தவளுக்கு கையில் கிட்டாருடன் போட்டி போட்டு கொண்டு வாசித்து கொண்டிருக்கும் யுவி கண்களில் தெரிய அடடே சாருக்கு இந்த ஞானம் கூட இருக்கா?? என்று அதிசியத்து போனாள்.

இவன் கிட்ட எப்படி கிட்டார் இதுவரையும் பாத்தது இல்ல என்று தனக்குதானே கேள்வி எழுப்பியவள் பரவாயில்லை ஏதோ கேக்குரா போலதான் வாசிக்கிறான்… என்று மனதிற்குள் குறித்துக்கொண்டவள் இத வாங்கதான் காலைல அக்காகிட்ட காசு கேட்டாரோ நல்லவேல அக்கவீட்டு மாடியில வத்தல் காயவைக்க போனதை பேச்சு சுவாரஸ்த்துல யாரும் என்னை கவனிக்கல ஏதோ ஊதாரி தனமா செலவு செய்ய தான் காசு கேக்குறான்னு நான் கூட அவனை தப்பா நினைச்சி திட்டிட்டேன். சாரிடா யுவி என்று அவனிடம் மனசிகமாக மன்னிப்பு கேட்டாள் மலர்.

2 Likes

nice and reality…

1 Like

To so much anna