படம் பார்த்து கதை சொல் 11

படம் பார்த்து கதை சொல் 11
0

04

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து ஒரு கதையாக தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

போன முறை உங்களோட திறமையைப் பார்த்து நான் வியந்து போயிட்டேன்.இந்த முறையும் உங்களோட கதைகளை படிக்கவும் , கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன். புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

2 Likes

ஆனந்தம்

ஆடர்… ஆடர்… ஆடர்…
என்ற மும்முறை டேபிலில் நீதிபதி தட்டவும் அமைதியானது அந்த இடம்.

அனைவருக்கும் மிகுந்த பரபரப்பு. இருக்காதா? மிக மிக முக்கியமான அந்த கேஸில் இன்று தீர்ப்பு வழங்க பட உள்ளதே!!!.

தீர்ப்பை தெரிந்து கொள்ள மக்களும், TRP க்கு தீணி வேண்டி பத்திரிகையாளர்களும் குடி இருக்க நீதிமன்றம் தன் பணியை துவக்கியது.

வழக்கு எண் 16/35. பெண்ணை நடு வீதியில் வைத்து கொலை செய்யததற்கான வழக்கு. குற்றவாளி பெயர் ராயப்பன் என்று டவாலி அறிவித்தவுடன் குற்றவாளி கூண்டில் வந்து நின்றான் ராயப்பன்.

வாத பிரதிவாதங்கள் எல்லாம் முன்னமே முடிந்துவிட்டமையால் நேரடியாக தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் நீதிபதி.

ராயப்பனுக்கு பெண்ணை அவமதித்தது, மானபங்க படுத்தியது, நடுத்தெருவில் வைத்து கொடூரமாக கொலைசெய்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது என்று பல பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின்படி ஆயுள் தண்டனையுடன் கூடிய மரண தண்டனையும் 1லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கபட வேண்டும் என்று வாசித்தவர் நிமிர்ந்து ராயப்பனை ஒரு பார்வை பார்த்தார்.

ராயப்பனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. மாறாக அவன் கண்களில் நிலவிய அமைதியும், திருப்தியையும் கண்டவர் தொடர்ந்து வாசிக்கலானார்.

சட்டவரைவுகள் படி மேல்குறிப்பிட்ட தண்டனைகள் வழங்க பட வேண்டிய குற்றம் தான் எனினும் ராயப்பனின் தரப்பில் இழப்புகள் அதிகம்.

அந்த வெறுப்பிலும் மன உளைச்சலிலும் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்த குற்றமென்பதால் ராயப்பனுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்பளிக்கிறேன் என்று முடித்தார்.

நீதிமன்றத்தில் குழுமியிருந்த அத்தனை பேருக்கும் ஆனந்தம் தான்.

கள்ளக்காதலுக்காக தான் சுமந்து பெற்ற தன் பிள்ளைகளை தன் கையாலேயே கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போக பார்த்து கணவனிடம் சிக்கி நடுத்தெருவில் கதற கதற கணவன் ராயப்பனின் கையால் கொலையுண்ட அபிராமியின் பெற்றோர் உட்பட, அத்தனை பேருக்கும் ஆனந்தம் தான்…

3 Likes