படம் பார்த்து கதை சொல் 12

படம் பார்த்து கதை சொல் 12
0

24

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து ஒரு கதையாக தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

போன முறை உங்களோட திறமையைப் பார்த்து நான் வியந்து போயிட்டேன்.இந்த முறையும் உங்களோட கதைகளை படிக்கவும் , கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன். புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

அரவணைப்பு

காண்போரை எல்லாம் தன்னுள் முழ்கடிக்கும் இருளின் மத்தியில் கண்ணீரும் கம்பளியுமாய் மிகுந்த பதட்டத்துடன் கடவுளே இந்த முறையாவது அவர் போனை எடுக்கனுமே என்ற வேண்டுதலோடு மீண்டும் ஒருமுறை மதனுக்கு கைபேசியில் அழைத்தாள் இளையநிலா.

இந்த முறை அவள் வேண்டுதலுக்கு எந்த தெய்வம் அருள்பாலித்ததோ அடுத்த அழைப்பின் ஆரம்பத்திலேயே தன் கைபேசிக்கு உயிர் கொடுத்து காதில் பொறுத்தினான் மதன் "என்ன நிலா இந்த நேரத்தில்?.. என்று தன் காதலியிடம் விசாரிக்க

“என்னங்க, என்னங்க எங்க இருக்கிங்க?எத்தனை முறை போன் பண்றது, போன் பண்ணா எடுக்க மாட்டிங்களா?” என்று பதட்டம் பாதியும் அழுகை மீதியுமாய் பேசிய நிலா அவனுக்கு புதியது

எந்த சூழ்நிலையிலும் கலங்காதவள் தன் தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும்கைவிடாதவள் இரவு 10.30 மணிக்கு போனில் அதுவும் இவ்வளவு பதட்டமாக கண்ணீருடன் பேசியது மனதை மிகுந்த கவலை கொள்ள செய்ய

"நிலா, நிலா… என்னம்மா ஆச்சி?.. ஏன் மா அழுகற?.. என்ன ஆச்சி ஏன் இவ்வளவு பதட்டமா பேசுற? எனிதிங் சீரியஸ்?.. என்று அவனும் என்ன ஆனதோ என்று பதட்டத்துடன் அடுத்த அடுத்த கேள்விகளை கேட்டான்.

“சீரியஸ் தான் மதன்…ரொம்ப சீரியஸ் என்ன செய்யறதுனே தெரியல யாரை கூப்பிடரதுன்னும் ஒன்னும் புரியல!!!” அழுகையினுடே இளையநிலா

“எங்க இருக்க நிலா?நீ எதுவும் முழுமையா சொல்லல நிலா…உனக்கு என்ன பிராப்ளம்? என்ன ஏதுன்னு சொன்னா தானே ஏதாவது பண்ண முடியும்… முதல்ல நீ எங்க இருக்க அதை சொல்லு? உடனே வரேன்…” என்றவன் அவள் இருக்கும் இடத்தினை கூறியதும் அவள் சிநேகிதிகளுடன் தங்கி இருக்கும் வீட்டிற்க்கு சென்றான்…

வாசலில் இருந்து அழைப்பு மணி சப்தம் கேட்டதும் அவனை எதிர்பார்த்து காத்திருந்ததை போல் படக்கென்று கதவினை திறந்தவள் அவள் மார்பிலேயே சாய்ந்து அழ துவங்கினாள் அவளின் நண்பிகளும் அவ்விடம் வர அவளின் நலம் கருதி தன்னிடம் இருந்து பிரித்து பக்கத்தில் இருத்திக் கொண்டவன் என்னமா என்ன ஆனது?ஏன் இப்படி அழற?"என்று அவளை தேற்ற வழி தெரியாமல் ஆதுரமாய் தலை வருடியபடி பக்கத்தில் இருத்திக்கொண்டான்.

“அண்ணா நிலாவோட அம்மாவ ஆஸ்பிட்டல்ல இப்போதான் சேர்த்து இருக்காங்கலாம் அவங்களுக்கு இது இரண்டாம் முறை அட்டாக்காம் இன்னும் ஐசியூ வில் தான் இருக்கங்களாம் இவளுக்கு இப்போதான் தகவல் சொன்னங்க அப்போல இருந்து மதுரைக்கு போகனும் போகனும்ன்னு ஒரே பிடிவாதமா இருக்கா நாளைக்கு நாங்களும் வரோம் போலாம்னு சொன்னாலும் கேக்கமாட்டுறா… இந்த ராத்திரி நேரத்துல அவள மட்டும் எப்படி தனியா அனுப்பறது… அதும் டிக்கட் கூட புக் பண்ணாம… சொன்னா புரிஞ்சிக்க மாட்டிங்கறா அதான் உங்களுக்கு போன் பண்ணிட்டா” என்றனர்.

“மதன், மதன் … அம்மா மதன் அப்பா இல்லாம எங்கள வளர்க்க எவ்வளவு பாடுபட்டாங்க தெரியுமா அவங்கள நல்லா வச்சிக்கதான் நானும் சிவாவும் பாடுபடுறோம்… நாங்க நல்லா அவங்கள பாத்துக்குற நேரத்துல எங்கள இப்படி தவிக்க விடுறாங்களே அவனும் டிரைனிங்ன்னு சொல்லி புனே போய் இருக்கான் திடீர்ன்னு இப்படி ஆகும்ன்னு நினைக்கல அவங்களுக்கு உதவின்னு யாரு இருக்கா அக்கம் பக்கம் பாத்தவங்கதான் ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க நான் எங்க அம்மாவ பாத்தாகனும் பிளீஸ் பிளீஸ் என்னை எப்படியாவது மதுரைக்கு கூட்டிட்டு போய் எங்க அமமாக்கிட்ட சேர்த்திடு பிளீஸ்” என்று அழுகையில் கரைந்தபடி மதனிடம் மன்றாடினாள் இளையநிலா…

அவள் அழுவதை தாங்கி கொள்ளாதவன் “ஹேய் நிலா நீ எவ்வளவு தெளிவான பொண்ணு நீ போய் இப்படி துவண்டு போகலாமா? உனக்கு இருக்கும் தைரியம் எங்க போச்சி முதல்ல இந்த அழுகைய நிறுத்து நீ அழுதா உங்க அம்மாக்கு சாரி சாரி என் அத்தைக்கு புடிக்குமா? சொல்லு? அவங்க எவ்வளவு தைரியம் சொல்லி வளர்த்து இருப்பாங்க அதுல ஒரு பர்சன்ட் கூடவா உன்னிடம் இப்போ இல்லை சொல்லு? அத்தைக்கு எதுவும் ஆகாது நம்ம கல்யாணம், சிவா கல்யாணம், நம்ம பசங்க, சிவா பசங்க எல்லாம் பார்க்கதான் போறாங்க டா நம்பிக்கையோட இருக்கனும்”… என்று அவளை தேற்றி

அவளுடைய சக தோழி ரேணுகாவை பார்த்து “சிஸ்டர் அவளோட முக்கியமான திங்க்ஸ் மட்டும் கொஞ்சம் பேக் பண்ணி தறீங்களா நான் அவளை அழைச்சிட்டு மதுரை கிளம்புறேன்” என்றவன் ஆன்லைனில் டிக்கட் உள்ளதா என்று பரிசோதிக்க ஆரம்பித்தான்.

“சியர் அப் டி நீ மனச போட்டு குழப்பிக்காத அம்மாக்கு ஒன்னும் ஆகாது அங்க போய் இறங்கியதும் ஒரு போன் பண்ணுடி” என்ற தோழி மதனிடம் ஒரு பேகை கொடுத்தவள் “அண்ணா அவளுக்கு தேவையானத வைச்சி இருக்கேன் பாத்துக்குங்கனா” என்று அவர்களை வழி அனுப்பி வைத்தாள் …

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கியவர்கள் அவர்களுக்கான இருக்கையை தேடிபிடித்து அமர்ந்தார்கள். அவர்களின் பரபரப்பு ஓய்ந்து ஆசுவாசமாய் மூச்சி விட்டாலும் விடாது ஒலிக்கும் காயத்திரி மந்திரம் போல் அம்மா அம்மா என்று அனற்றியபடி இருந்தவள் ஒரு கட்டத்தில் அழுது அழுது களைத்து போய் வீங்கிய கண்களும் தன்னுடைய அசதியை கூறிக்கொள்ள தன்னையும் அறியாமல் தூக்கத்தின் பிடியில் மதனின் மேல் சாய்ந்தாள் இளையநிலா . தன்னவள் சோர்ந்த போது அவளை தாங்கியவனும் அவளுடன் தன் எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்.

3 Likes

Super ah irukku kutty story…

1 Like

My favorite oviyar maathiri

1 Like

Nice da bhagi

1 Like

Thanks na​:heart_eyes::heart_eyes::heart_eyes::heart_eyes:

1 Like

Tq so much dear

இளையநிலா மதன் இருவரும் அருமையான ஜோடி…

1 Like

Tq so much ka

1 Like

பெண்ணின் கடின துளிகள்:

ஊர்மக்கள் கூடி நிற்க, கெட்டிமேளம் விண்ணை பிளக்க, படடுப்புடவை சரசரக்க தலைநிமிரா பதுமையென பெண்ணவள் வந்தமர்ந்தாள் மணவறையில்.

அக்கினியின் தனல் என்னவோ சுடவில்லை, ஆனால் அருகில் இருப்பவனின் சிறு தீண்டலில் தனலாய் திஹித்தது அவளின் மேனி.

தோழிகளின் சீண்டலோ? ஐயரின் மந்திரம் ஓதலோ? பெற்றோரின் வார்த்தைகளோ? மற்றவரின் உரையாடலோ? எதுவுமே ஏற்கவில்லை மூளையது.

மணப்பெண்ணின் நாணமோ, புது உறவுகள் சூழ நிற்கும் தயக்கமோ, அடுத்து என்ன என்ற பதட்டமோ, தன் அருகில் இருப்பவனின் முகம் நோக்காமல் கவிழ்ந்தே இருந்தது தலை.

லட்சமோ லட்சத்தி ஒன்றோ என்று அறியாமல் தொடர்கின்றது பட்டாம்பூச்சிகளின் ஊறல் அவளின் அடிவயிற்றில்.

திருமணம் என்றவுடன் தடைகள் பல வர என் மகளின் முன் முக்கியம் எதுவுமில்லை என தூணாய் நிற்கும் தந்தையை பிரியபோகும் வேதனை ஆழமாய் இதயத்தை கிழித்திட…

சில நேரங்களில் குருதி வரும் வரை சண்டையிட்டாலும் பல நேரங்களில் தங்களுக்கு நடுவில் யார் வந்தாலும் துரத்தி அடிக்கும் பாசம் மேலோங்கும், தங்கைக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காது என கூறி வெளியே சண்டையிடுவது போல் தெரிய உண்மையில் அவளுக்காக விட்டுக்கொடுக்கும் தமையனின் விழிகள் நீர் சுரக்க, கலங்கி ஓரமாய் நிற்பதை கண்டு அவனை பிரியப்போகும் தருணம் நெருங்குவதை உணர்ந்து வலியில் துடித்திட…

“பெண்பிள்ளையென்ற பொறுப்பில்லை” என்று ஆயிரம் முறை வெளியில் நொடித்தாலும், தன் வாய் திறக்காமலே மகளின் தேவையென்ன என்பதை அறிந்து பூர்த்தி செய்யும் தாயவளை விட்டு விலகபோகும் நேரம் வந்துவிட்டதை எண்ணி மனம் கலங்கிட…

வியர்வைத்துளிகள் நெற்றியில் அரும்பு, விழிகள் இறுக மூடியிருக்க, ஒரு சொட்டு கண்ணீர் துளி வழிந்தோட, அனைவரின் ஆசியோடு திருமண பந்தத்தில் இணைக்கும் மஞ்சள் கயிரெனும் மாங்கல்யத்தை “இனி உனக்கு எல்லாமே நான் தான்” என்று செவிகளில் கிசுகிசுத்தபடி மூன்று முடிச்சிகளையும் தானே போடும் கணவனின் சொற்களில் பிடரிமயிர் நின்றது அவளுக்கு.

வந்தவர்கள் வயதானவர்கள் என அனைவரும் மனதார வாழ்த்த அனைவரையும் அறிமுக படுத்தும் படலத்தில் சற்று களைத்ததென்னவோ உண்மைதான்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் என எண்ணிலடங்கா முறைகளில் இரண்டு நாட்கள் நொடிகளாய் கழிந்திட, கணவனின் கரம் பற்றி பெற்றோரின் கரம் விடும் நேரம் வந்தது.

“நல்லபடியா போய்ட்டு வாடா. இனி அவங்க தான் உன் முதல் உறவுகள். எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவையற்ற சொற்களும் யார் வாயிலும் வராதபடி நடந்துகொள்.” என்று உச்சிமுகர்ந்து விழியோரம் துளிர்க்கும் கண்ணீரை மறைக்கும் தந்தை.

“அக்கா பத்திரம் போன உடனே எங்களுக்கு போன் பண்ணு” என்று கண்ணீருடன் நிற்கும் உடன் பிறவா தங்கை தம்பிகள்.

“பாப்பா! தினமும் இல்லன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது போன் பண்ணுடா. என்கிட்ட சண்டை போன்ற மாதிரி மச்சான்கிட்டயும் சண்டை போட்டுட்டு இருக்காத. இனி நிறைய பொறுப்புகள் இருக்கு உனக்கு. அதுக்கு ஏத்தாப்புல நடந்துக்கோடா” என்று கட்டியணைத்து உச்சிமுகர்ந்து விழிநீர் சுரக்க வழியனுப்பும் தமையன்.

இறுதியில் நான் குடியிருந்த கோவிலாக நிற்கும் தன் தாய்.

“போறது புது இடம்டா. எல்லாருக்கும் புடிச்க மாதிரி நடுந்துக்க முயச்சி பண்ணு. எடுத்ததுக்கெல்லாம் மூஞ்ச தூக்கீ வச்சிக்கிக்கூடாது. அது உன் புகுந்த வீடு. இன்பமோ துன்பமோ எல்லாரையும் அனுசரிச்சு போ. என்ன வாக்குவாதம் இருந்தாலும் உங்க வீட்டுக்காரர்கிட்ட விட்டுக்கொடுத்து போடா. அம்மா தினமும் போன் பன்றேன்” என்று அடக்க முடியாமல் அழும் மெல்லிய இதயம் கொண்ட அம்மா.

இவர்களின் பேச்சில் கரைந்து அவளும் விழிகளில் நீரோடு நிர்க்க.

“அப்போ! கிளம்புறோம் மாமா, அத்தை டைம் ஆகுது ட்ரைன்க்கு” என்று அவளின் கரத்தை ஆறுதலாய் அழுத்தும் கணவனை நோக்கினாள்.

‘நானிருக்கிறேன். எல்லாம் சரியாகிடும்’ என்று விழிகளை மூடி திறந்து ஆறுதல் கூறினான்.

“மாப்பிள்ளை! சின்ன பொண்ணு ஏதாவது தப்பு பண்ணா எடுத்து சொல்லுங்க புரிஞ்சுப்பா. திட்டிறாதிங்க” என்று கூறும் தந்தையின் பின் அதே வார்த்தைகளை விழிகளால் பேசி நிற்கும் தாயும் தமையனும்.

அவர்களை கண்டு லேசாக புன்னகை பூத்தவன், “நீங்க யாரும் கவலை படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று ஆறுதல் கூறி கிளம்பி ரயில் நிலையம் செல்லும் வழிநெடுகிலும் இருவரின் இதயங்கள் மட்டுமே பேசி கொண்டு வந்தன.

ரயில் நிலையம்,

தங்கள் ரயில் பெட்டியை கண்டு கொண்ட பின் ஏறி அமர்ந்தனர். பிறந்த வீட்டை பிரிவது, சொந்தங்களை பிரிவது, புது உறவு, புது பயணம் என்று மனம் மகிழ்ச்சியிலும் துன்பமுமாய் மாறி மாறி சுழன்று கொண்டிருக்க, விழிகள் மூடி சாய்ந்தவளின் நிலை அறிந்தவன் மெல்ல அவளின் இடக்கரத்தில் தன் வலக்கரத்தை வருடி இறுக பற்றினான்.

திடிரென்ற தொடுதலின் மின்சார தாக்கத்தில் விழி திறந்தவள் அவனையும் கரங்களையும் பார்க்க, “உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா இனி என் வாழ்க்கையோட இறுதி மூச்கு வரை உன்கூட தான் இருப்பேன். உனக்கு என்ன வேணும்னாலும் தயங்காம சொல்லு, கேளு நான் இருக்கேன். இனி நீ நான் வேற வேற இல்ல புரியுதா?” என்று அவளின் விரல்களில் மென்மையாய் இதழ்களை பதித்தான்.

அவன் வார்தைகள் சிறு தெம்பூட்ட தன்னவன் தோளில் சாய்ந்து தான் புது வாழ்க்கை நோக்கி பயணத்கை தொடங்கினாள்.

மகளாய் பிறக்கும் ஒவ்வொரு அவளுக்கும் இக்கதை சமர்ப்பணம்…

உங்கள் தர்ஷினிசிம்பா.

2 Likes

Super pa :ok_hand::ok_hand::ok_hand:

1 Like

thanks da

புதிதா திருமணம் ஆகும் ஒரு பெண்ணின் மனநிலையை அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள் தர்ஷினி

1 Like