படம் பார்த்து கதை சொல் 2

படம் பார்த்து கதை சொல் 2
0

download%20(2)
ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும்,ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

போன முறை உங்களோட திறமையைப் பார்த்து நான் வியந்து போயிட்டேன்.இந்த முறையும் உங்களோட கதைகளை படிக்கவும் , கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன். இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

புது மணப்பெண்ணிற்குரிய அச்சத்துடனும், கூச்சத்துடனும் அமர்ந்திருந்தாள் அவள்…

சுற்றி இருந்தவர்களின் கேலிகளுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி கொண்டு இருந்தாள்… யாரை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைக்க நினைத்தாலோ, யாரை நம்பி அவன் கரம் பற்றி புது இடத்தில், புது மனிதர்கள், புது விதமான பழக்கவழக்கங்கள் யாருக்காக அவள் ஏற்க துணிந்தாலோ அவனை பொன் தாளி தன் கழுத்தில் அணிவித்ததிலிருந்து பார்க்கவில்லை…

இன்னும் சிறிது நேரத்தில் அவனுடன் இருக்க போகும் தனிமை அவளின் பெண்மையை தூண்ட, மகிழ்ச்சியாக அவனுடன் இருக்க போகும் நொடியை நினைத்தப்படி முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்…

ஆனால் அவனோ பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மிருகத்தனமாக அவளின் பெண்மையை வேட்டையாடினான்…

அந்த நொடி அவளுக்கு அவனின் உருவம் மனிதனாக தெரியவில்லை ஒரு மிருகமாக, தன்னை வேட்டையாடிய கொடிய மிருகம் என்று எண்ண தோன்றியது…

அந்த நொடி ஒரு முடிவெடுத்தாள்… இம்மிருகத்துடன் வாழ்வதற்கு பதில், தன் சுயத்தை, ஆசைகளை இழந்து வாழ்வதற்கு பதில் இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாமென அவனை புழுவை போல பார்த்து விட்டு நகர்ந்தாள் அவள்…இனி வாழ போகும் வாழ்க்கை வளமாய் அமையும் என்ற நம்பிக்கையுடன்…

5 Likes

காலம் பல நூற்றாண்டை தாண்டி இருந்தது. இங்கே இப்போது முன்னிலும் மக்கள் நிறைய மாறி இருந்தார்கள்.

அடுத்த மாநிலத்தில் பெண் எடுத்து நாட்கள் போய் அடுத்த கிரகத்தில் ஆண்களை தேடிக்கொண்டு இருந்தார்கள்.

அறிவியலின் வளர்ந்து ஆயிரம் கிரகத்தில் வசிக்கும் மனிதர்களை அடையாளம் தெரிந்து இருந்தது. அது போல அமைந்த வரன் தான் இது போல ஒரு மாப்பிள்ளை.

இந்திய பெண்களின் நாணம் கலந்து வெட்கம் அடுத்த கிரகத்தில் கூட பரவி இருந்தது. வேறு கிரகத்தில் குடி போக இது போன்ற மான்ஸ்டர் திருமணம் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தனது மகளுக்கு கதை தானே என இஷ்டத்திற்கு வாயில் வந்ததை படம் பார்த்தபடி சொல்லிக்கொண்டு இருக்க…

போம்மா நான் பாட்டிகிட்டேயே காக்கா வடை தூக்கின கதையை கேட்கறேன். எப்ப பார்த்தாலும் பொய் பொயா சொல்லற என ஓடிய மகளை பார்த்தவள். வா நைட்டுக்கு கதை சொல்லுன்னு வருவேல்ல அப்ப பேசிக்கறேன். என்று சொன்னவள் தான் சொன்ன கதையை கேட்டு… தானே சிரித்துக்கொண்டாள். ( கொஞ்சம் ஓவர் தான் பாப்பாவுக்கு சொன்ன கதை )

4 Likes

சூப்பர் டா மச்சான் நெனச்ச மாதிரியே நீ காதலிச்ச பொண்ணயே கல்யாணம் பண்ணிட்ட… ம் ம் என்ஜாய் என்று சுற்றி நின்ற நண்பர் பட்டாளம் கேலி செய்ய சாதித்துவிட்ட பூரிப்போடும், கர்வத்தோடும் சிரித்துக்கொண்டிருந்தான் அமர்.

மற்றவர்கள் நகர்ந்ததும் அவன் உற்ற நண்பன் மிதுன் சற்று யோசனையோடு பரவால்ல டா மச்சான், நான் கூட நீ வழக்கமா கரெக்ட் பண்றபோல தான் சுத்துறனு பார்த்தேன். ஆனா கல்யாணம் பண்ணி நீ செட்டில் ஆனாதுல ரொம்ப சந்தோஷம் டா என்றான் உண்மையான சந்தோஷத்தோடு. அவனை நக்கலாக பார்த்து சிரித்த அமர் மச்சான் நீ என்ன புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா? நானும் ட்ரை பண்ணேன் டா. அவ என்னவோ கௌரவம், பண்பாட்டு னு பத்தினியாட்டமா பேசுனா. மிஞ்சியும் பாத்ததேன் போலிஸ் அது இது னா. சப்ப ஃபிகர் னா போடினு கலட்டி விட்றலாம். இவ சூப்பர் ஃபிகர் வேற. நம்மூருல தான் தாலி கட்டிட்டா ரேப் கூட லீகல் ஆச்சே அதான் சரி னு ஒரு கயிற கட்டிட்டேன். இப்ப நான் என்ன பண்ணாலும் அவளால தடுக்க முடியாது ல. ஆச தீர அனுபவிச்சிட்டு வெறட்டிவிட்டு வேற தேடிட வேண்டியதுதான் என்று சிரித்தவனை அதிர்ந்து பார்த்து இவன் என்னிக்குமே திருந்த மாட்டானா என்று யோசித்து கொண்டே வெளியேறினான் மிதுன்.

அழகு தேவதையாய் அலங்கரித்த தேராய் உள் நுழைந்தவளை உமிழ்நீர் வழிய வேட்டையாட காத்திருக்கும் ஓநாய் போல பார்த்தான் அமர். தாவி அணைக்க வந்தவனை அய்யோ என்ன அமர் நீ , மொத பால் குடிக்கனும் என்று சிணுங்க அதுவா முக்கியம் இதுக்காக நான் எவ்ளோ நாளா காத்திருந்தேன் என்று சொல்ல. அதுலாம் இல்ல உங்க அம்மா சொல்லி அனுப்பினாங்க என்று பால் டம்பளரை கையில் தந்தாள். ஒரே மடக்கில் சரித்துக்கொண்டவனை பார்த்து நான் இதோ வந்துட்றேன் என்று சொல்லி பாத்ரூம் போய் கதவடைத்தாள். அவள் வெளியில் வரும் போது அந்த கொடிய மிருகம் வாயில் ரத்தம் வழிய இறந்து கிடந்தது. …

5 Likes

:joy::joy::joy: semma…

1 Like

சூப்பர். …

1 Like

காதலித்து கரம் பிடித்தவன்… அவள் இதயத்தை தன் இளகிய மனதால் வசம் செய்தவன்… யாருக்குத்தான் பிடிக்காது தன்னை உள்ளங்கைகளில் வைத்து தாங்கும் இன்னொரு உயிரை…??

அதுவும் அவனது உருவத்திற்கும், ஆற்றலுக்கும் அவனுள் குட்டியாய் ஓர் இதயம் உள்ளது அது நிறைய கொள்ளை கொள்ளையாய் காதல் உள்ளதென கூறினால் யார் தான் நம்புவார் …

ஆனால், அனு அனுவாய் அந்த அன்பை அனுபவிப்பவள் நம்பித்தானே தீரவேண்டும்!! அவனை முதலில் பார்த்த சம்பவம் நினைவிலாடியது…

அவள் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்… ஆராய்ச்சிக்காக ஒரு காட்டிற்குள் செல்ல அங்கிருந்த ஒரு குகைக்குள் இவள் மட்டும் எதிர்பாராவிதமாய் மாட்டிக் கொண்டாள்…

அவளுடன் வந்த சக ஆராய்ச்சியாளன் தனிமையை பயன்படுத்தி அவளை இனிமை காண அழைக்க…, அவனிடமிருந்து தப்பும் முயற்சியில் குகைக்குள் விழுந்துவிட்டாள்…

விழுந்த அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தவள், கண் விழிக்கையில் அவளெதிரே அவளுக்கு விசிறியபடி அமர்ந்திருந்தது அந்த உருவம்…

கதைகளில் வரும் பெரும்பூதம் போன்ற உருவத்தைக் கண்டு மீண்டுமாய் மயங்கிச் சரிந்தாள்… ஆனால், அந்த உருவம் அவளுக்கு யாதொரு தீங்கும் செய்யவில்லை… அவளுக்கு மீண்டுமாய் விசிறியபடி கவலை படிந்த முகத்துடன் தான் அமர்ந்திருந்தது அவளெதிரே …

வெளியில் பெண்மையை களவாட துணிந்த மனித உருக்கொண்ட மிருகத்தை விட, காருண்யம் கொண்ட மிருக உருக் கொண்ட அன்பன் நல்லவனாய் தோன்றினான்…

பெண்ணை பெண்மையை, அன்பை போற்றுதலே மனிதம்… உருவம் வேறாய் இருந்தாலும் அவனுள் இருக்கும் கருணையும் காருண்யமும் சிறந்தது என புரிந்து கொண்டாள்…

அவனது அன்பில் கரைந்தவள், அவனையே மணக்கவும் முடிவெடுத்தாள்!! இதோ கந்தர்வ மணம் தான்… !!

முதலிரவிற்கு தயாராகி வந்தால்… அந்த உருவம் இப்போதும் இவள் நலம் நாடி இவளுக்காய் மரக்கிளையில் அழகாய், பாதுகாப்பாய் ஓர் ஊஞ்சலை கட்டி வைத்து இவளை பூப் போல தூக்கி அதில் வைத்து தாளாட்ட துவங்கி விட்டது…!!

கண் தூக்கத்தில் சொக்க…, விழித்துப் பார்த்தால், தாயாரின் காட்டுக்கத்தல் காதை கிழிக்கிறது!!

“அடியே…!! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரமாச்சு… இப்படியா பட்டப்பகல்ல தூங்கித் தொலைவ? எந்திரி எரும…”

தன் கனவை எண்ணி வெட்கம் கொண்டு வரப்போகும் மணமகன் நல் மனம் கொண்ட மனிதனாய் இருக்க வேண்டுமென்ற வேண்டுதலுடனும் கிளம்பத்தொடங்கினாள்.

2 Likes

கருமை வானின் உச்சியில் நிலவு உலவும் நள்ளிரவு நேரம். ஊருக்கு ஒதுக்குப்புறமான பாழடைந்து புதர் மண்டிய கருங்கல் மாளிகை. அம்மாளிகையின் ஒரு அறையிலிருந்து அந்த சுற்றுப்புறந்திருக்கு சற்றும் சம்பந்தமில்லாத ரோஜா, மல்லிகை, பிச்சியின் இனிய நறுமணத்தோட ஊதுபத்தியின் மணமும் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. தேவ கன்னிகையாய் மோகன சுந்தரி ஒருத்தி பூரண அலங்காரத்தில் இளஞ்சிவப்பு பட்டில் கையில் வெள்ளி டம்ளருடன் நடந்து சென்றாள். அவள் கொலுசொலி அந்த நிசப்பதமான மாளிகையின் சிதறிய வெள்ளி நாணயம் போன்று நான்கு திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

மெல்லிடை வளைய அன்னநடையில் கட்டிலை நோக்கி வந்தவள், ஒரு ஓரம் அமர்ந்துவிட்டு பால் டம்ளரை நீட்டினாள். இதென்ன என் பெண்மையில் புதிதாய் உணரும் நாணம்! இந்த கன்னங்கள் ஏன் கனல் பூக்களாய் தகித்துச் சிவக்க வேண்டும்? தன் நடுக்கத்தை தன்னவன் கண்டுகொள்வானோ என்ற ஐயத்தில் அவளால் அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை. நீட்டிய டம்ளரை பற்றிய கரங்களில் ஒரு திரவம் ஊரும் தன்மையும், குளிர்ச்சியும் உணர, தீண்டிய விரல்களும் சொரசொரப்புடன் வலிமையாய் இருந்தது. அதே நேரம் காற்றில் பூக்களின் நறுமணத்தை விரட்டிவிட்டு இரத்தம் கலந்த மாமிச வாடை வீச அதிர்ந்து திரும்பியவள் அவ்வகோர உருவத்தைக் கண்டு வீலென்று கத்தியவாறு மயங்கிச் சரிந்தாள்.

தன் சரிரத்தை ஏதோ பலமான விசை அழுத்தி உலுக்க, மெல்ல இமைகளை பிரித்து எழுந்து அமர்ந்தான் அவன், சுற்றிலும் பார்வையை சுழற்ற கசங்காத மலர்கட்டிலில் தான் படுத்திருப்பதை உணர்ந்தான். “எருமைமாடு, எருமைமாடு எழுகழுதை வயசாகுதுன்னு உனக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சேனே என்னை சொல்லணும், பொண்ணு மயங்கினாலும் பரவாயில்லை என் பையன் தான் முதராத்திரியில மயங்கி விழுத்துட்டான்னு எப்படிடா வெளிய சொல்ல முடியும்? ஐயோ இப்போ சம்பத்தி வீட்டுக்காரங்களுக்கு நான் என்னனு பதில் சொல்லுவேன்” என புலம்பியவாறு அவன் அன்னை தலையில் நங் நங் குட்டிவிட்டுச் சென்றார்.

அவன் நினைவிலோ ஐயோ அந்த கதையில அதுக்கு அப்பறம் என்னாச்சு என்ற கேள்வி எழ, “மச்சி முதல் ராத்திரிக்கு முன்னாடி இந்த புக்க படிச்சிட்டுடா, இது தான் உனக்கு நான் தர கல்யாணப்பரிசு” என்று அந்த புத்துகத்தை தந்த நண்பனும் நினைவில் வந்தான். ஏதாவது கில்மா புக்கா இருக்கும் தனக்கு உதவியா இருக்கும், அவள் வரும் வரை படிப்போம் என படிக்கத் துவங்கிய முட்டாள் தனத்தை எவ்வாறு வெளியே சொல்வது! “இருடா மவன உன்னை வந்து கவனிச்சிக்கிடுறேன்” என நினைத்தவாறு திரும்ப, புதுப்பூவாய் அவன் புது மனைவி நின்றிருந்தாள். ‘ஐயோ உலக வரலாற்றிலே மறக்க முடியாத முதல் ராத்திரி உன்னது தான்டா, முதல் நாளே மயங்கி விழுந்து மனம் போச்சே, புது பொண்டாட்டி என்ன நினைப்பா? ஒரு ராத்திரி வீணா போச்சே! 90’ஸ் கிட்ஸ் எல்லாம் கனவுல கூட அது நடக்காது போல, ஐயோ சோனமுத்தா போச்சா?’ என நினைத்து அவளை பார்த்து அசடுவழியச் சிரித்தான்.

4 Likes

“ஏன்டி ராகினி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? உன்னோட அழகுக்கும்,திறமைக்கும் ஆயிரம் பேர் காத்துக்கிட்டு இருக்கான்… நீ என்னடான்னா இந்த குரங்கு மூஞ்சிக்காரனைத் தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்னு இப்படி பிடிவாதம் பிடிக்கிற…”

“அம்மா வாழ்க்கைக்கு அழகா முக்கியம்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன்… எனக்கு அவர் தான் வேணும்… அவரையே கட்டி வைங்க…ப்ளீஸ்”

“எப்படியோ போ…நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தெருவில் ஒண்ணா நடந்து போக முடியுமா? ஊரே கேலி பேசி சிரிக்கும்”

“அம்மாஆஆ…”

“சரி சரி…பெத்த கடமைக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்…”

திருமணத்தன்று இரவு…

“ராகினி…மணமேடையில் உங்க ரெண்டு பேர் ஜோடிப்பொருத்தமும் கொஞ்சமும் சகிக்கலைடி…இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை…இப்படியே திரும்பிடு…சீக்கிரமே பேசி விவாகரத்து வாங்கிடலாம்” என்றாள் ராகினியின் தோழி சுபா…

“அட முட்டாளே…ஏன் சுபா மத்தவங்களுக்கு தான் நான் ஏன் இந்த குரங்கு மூஞ்சியை கல்யாணம் செஞ்சேன்னு தெரியலை…உனக்குமா? மூஞ்சி எப்படி இருந்தால் என்னடி? ஆள் நல்ல பசையான பார்ட்டி…உட்கார்ந்து சாப்பிட்டா கூட பத்து தலைமுறைக்கு சொத்து வரும்…”

“அதுக்காக…இப்படி ஒருத்தனை எப்படிடி காலம் பூரா சகிச்சுக்கிட்டு…”

“ஹே…சுபா…என்னை விட அழகு கம்மியா இருக்கிறவனை கல்யாணம் செஞ்சா தான்…அவன் எனக்கு அடங்கி இருப்பான்…என்னோட அழகில் மயங்கி நான் எது கேட்டாலும் தயங்காம உடனே வாங்கித் தருவான்”என்று அவள் காரணங்களை பட்டியல் இட தோழிக்காக வருந்துவதா இல்லை மகிழ்வதா என்பது புரியாமல் தடுமாறினாள் சுபா…

முதலிரவு அறைக்குள் அவள் வெட்கத்துடன் நுழைய… அங்கே கண்ட காட்சியில் அவள் கண்கள் நிலைகுத்திப் போனது.

அங்கே படுக்கையில் அவளது கணவன் கையில் மதுபான பாட்டிலை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டு இருந்தான்.அது போதாது என்று அவனுக்கு அருகில் வேறு ஒரு பெண்ணும் நின்று கொண்டு இருக்க… ராகினிக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதே தெரியவில்லை.

‘இந்த நேரத்தில் இவளுக்கு இங்கே என்ன வேலை?’

“யார் இவ?”

“இன்னிக்கு நீ எனக்கு பொண்டாட்டியா ஆன மாதிரி…நேத்து வரை இவ தான் எனக்கு பொண்டாட்டியா இருந்தா…”என்றவனின் பேச்சில் அவள் முகம் ரத்த பசையின்றி வெளுத்துப் போனது.

“என்ன முழிக்கிற… பணத்துக்காகத் தான் அவளும் நேத்து வந்தா…இன்னைக்கு நீயும்” என்றவனின் பேச்சில் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தாள் ராகினி… ஒரு விபசாரிக்கு இணையாக தன்னை ஒப்பிட்டு பேசியதும் சுளீர் என்று அடி வாங்கியது போல திகைத்தாள்.

“நான் பேசினதை எல்லாம் கேட்டீங்களா?” என்றாள் கலவரமாக…

“ஆமா…ஒரு வார்த்தை கூட விடாம எல்லாமே என் காதில் விழுந்தது…”

“அ…அது சும்மா…என்னோட பிரண்டை சமாதானம் செய்ய…”

“ஹ…பொய் சொல்லாத…கல்யாணம் முடிவு ஆன பின்னே என்னைப் பார்க்க ஒருமுறையாவது நீ ஆர்வம் காட்டினாயா? நானா பேச முயற்சி செஞ்சப்பக் கூட நீ மறுத்த… உன்னோட கவனம் எல்லாம்…கல்யாணத்துக்கு எத்தனை வைர நகை வாங்கலாம்…பட்டுப்புடவை வாங்கலாம் என்பதில் தானே இருந்துச்சு…”

“அ…அது…அது ஒரு ஆர்வத்தில்…மத்தப்படி உங்களை பிடிச்சு தான் கல்யாணம் செஞ்சேன்…”

“போதும்”என்று உறுமியவன் மிருகத்தின் வேட்டைப் பார்வையுடன் அவளை நெருங்க…பயந்து போனாள் ரோகினி…

‘பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சுகிட்டது எவ்வளவு பெரிய தப்பு’ என்ற எண்ணத்தை அவள் கண்கள் பிரதிபலித்தது.

“என்னப் பார்க்கிற…உனக்குத் தேவை என்னோட பணம்…எனக்குத் தேவை சமூகத்தில் எல்லார் கிட்டயும் பெருமையா காட்டிக்க ஒரு அழகான மனைவி…” என்றவன் அறையில் இருந்த நேற்றைய மனைவியை வெளியே அனுப்பி விட்டு அவளை நெருங்க…தன்னுடைய முட்டாள்த்தனத்தை எண்ணி நொந்து போனாள் ராகினி.

அவள் கணவனோ அவளுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் இனி அவள் பணத்தை பற்றி யோசிக்கவே மாட்டாள்.நான் அவள் மேல் வைத்திருக்கும் நேசத்தைப் போல அவளும் என்னை புரிந்து கொண்டு காதலுடன் என்னுடன் இசைந்து வாழ்வாள்’என்று நிம்மதியுடன்… மிருகமாக இல்லாமல் கணவனாக அவளை அணுகினான்… காதலுடன்.

1 Like

Super ka

1 Like

தேங்க்ஸ் பேபி