படம் பார்த்து கதை சொல் 3

படம் பார்த்து கதை சொல் 3
0

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

உங்களின் கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

09

1 Like

பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் போது ஒரு 1/2 டவுசர் பையன் தன் க்ளாஸ் மேட் மாலாவுக்கு எழுதிய கடிதம் அதில் இருந்ததாவது

அன்பே மாலா நான்
உன்ன லவ் பண்றேன் பல நாளா
நீ என்னோட காதலுக்கு ஓகே சொன்னா கூலா
நம்ம ரெண்டுபேரும் போலாம் வீதியில் உலா
இப்படிக்கு
ராக்கி

அந்த கடிதத்தை வெட்கத்துடன் வாங்கிய மாலா ராக்கிக்கு அடுத்த தினமே ஒரு கடிதம் கொடுக்கிறாள்

லூசுப்பயலே ராக்கி இந்த வயசுலயே எனக்கு போடுறியா கொக்கி
நீ எனக்கு லெட்டர் கொடுத்தத எங்க அப்பாட்ட சொன்னன்னா அவங்க அடிக்கிற அடில தொண்ட விக்கி
செத்துருவடா பக்கி :smiling_imp::smiling_imp: அதனால இனி இப்டி பண்ணாம ஓடிரு பொடி டப்பி

அப்டி எழுதி ஒரு கடிதம் கொடுத்தா அத பாத்த ராக்கி உயிர் பயத்துல ஓடிப்போய்ட்டான் :flushed::flushed:

4 Likes

ஆகாய நீல பாவாடை தாவணியில், புத்தகமும் சாப்பாட்டு டப்பாவையும் நெஞ்சோடு அணைத்தபடி சாந்தமான முகமும் குனிந்த தலையுமாய் கல்லூரிக்கு செல்லும் அஞ்சனாவை அந்த பகுதி இளவட்டங்களின் பார்வை தீண்டாது இருக்காது . ஆனால் யாரும் இதுவரை அவளிடம் நெறுங்கி யாரும் பேச முனைந்ததில்லை.

சில நாட்களாய் ஒரு அரைக்கால் சட்டை போட்ட அரைக்காப்படி கையில் ஒரு காகிதத்தோடு பின்னாலேயே வருவதும் ஏதோ சொல்ல நினைப்பதும் அஞ்சனாவுக்கு சஞ்சலத்தையும் பயத்தையும் தந்தது.

இதோ இன்றும் பின்னால் தான் வருகிறான். இன்று மேலும் சோதனையாய் அவள் பெயரை சொல்லி அழைக்கவேறு செய்கிறான். கிலி பிடித்துக்கொண்டது அஞ்சனாவுக்கு எனினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு திரும்பி

“இங்க பாரு தம்பி, நீ நெனைக்கற மாதிரி பொண்ணு நான் இல்ல. எனக்கு படிக்கனும். இந்த லவ்லாம் எனக்கு செட் ஆகாது. வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாங்க. அதோட நீ என்ன விட ரொம்ப சின்ன பையன். இதுலாம் தப்பு”

என்று மூச்சு விடாமல் கொட்டி தீர்த்தாள்.

அவளை வினோதமாய் பார்த்து விட்டு அவன்

" அய்யே… ஆச தான்… இது எங்க கடையில உங்க அம்மா வாங்குன மளிக சாமான் பில்லு, 2 மாசமா பணம் தரல னு பில் ல குடுத்து கேட்டுட்டு வர சொன்னாரு எங்கப்பா" என்றான் காட்டமாக…

இதோ… இதோ… இப்டி தான் இப்டி தான்…

இப்போ உங்க முகம் போற அதே மாதிரி தான் அஞ்சனா முகமும் போச்சு… (ஆத்தி… ஏதோ ஆயுதம் எடுக்குற மாதிரி இருக்கே… ஓடிரு டி அஞ்சலி… )

புள்ளயாரு கூப்டுறாரு பை…பை…

3 Likes

யேய் பொண்ணு நில்லு… உன்ன தான் சொல்லிட்டே இருக்கேன் நிக்க போறீயா இல்லையா? என்று அரை டவுசர் போட்ட ஒரு பையன் வெகு நாட்களாக இவளை தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறான்…

இன்று அவனை ஒரு கை பார்த்து விட எண்ணி, “இங்க பாரு தம்பி நான் உன்னை விட வயசுல பெரியவ இந்த மாதிரி பேப்பர தூக்கிட்டு பின்னால சுத்தி உன்னோட டைம்ம வேஸ்ட் பண்ணாத என் பின்னாடி சுத்திக்கிட்டு லவ் பண்றேன் வயசுலாம் ஒரு தடை இல்லன்னு பேசற வேலையெல்லாம் வேண்டாம்… இனிமேல் என் பின்னாடி வந்த அவ்வளவு தான்” என்று எச்சரித்து விட்டு நகர போனவளை,

அய்யோ அக்கா நீங்க தப்பா புரிஞ்சி இருக்கீங்க, நான் லவ் பண்றது உங்கள இல்ல உங்க தங்கச்சிய அவள பார்த்தா பயமா இருக்கு ப்ளீஸ் இத உங்க தங்கச்சி கிட்ட குடுத்திடுங்க என்று கடிதத்தை அவள் கையில் திணித்து விட்டு ஒடி விட்டான்…

அவளோ நல்ல வேளை நான் அசிங்கப்பட்டத இங்க இருக்க இரண்டு பேர தவிர யாரும் பார்க்கல என்று ஒடியே விட்டாள்…

3 Likes

Super sid kavithai athum adikira adila thondaila viki sethuruvada pakki wow :joy::joy::clap:t2::clap:t2:

1 Like