படம் பார்த்து கதை சொல் 4

படம் பார்த்து கதை சொல் 4
0

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும்,ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

போன முறை உங்களோட திறமையைப் பார்த்து நான் வியந்து போயிட்டேன்.இந்த முறையும் உங்களோட கதைகளை படிக்கவும் , கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன். இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

1 Like

அஜய் இது வரை எந்த பெண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. தோழமையில் அதிகமாக உரிமை எடுத்து பழகுவான்அவ்வளவே.
அதனால் அவனது நட்பு வட்டம் அவனை தயிர் சாதமென்று தான் கூப்பிடும். வழக்கம்போல வீக் எண்ட் கொண்டாடி திலீப் வீட்டிலிருந்து கிளம்பியவனுக்கு மனது ஆறவேயில்லை. என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என்று குமைந்து கொண்டே இருந்தது. காரணம் திலீப் வீட்டில் எதை எதையோ பேசி பேச்சு பெண்கள் விஷயத்திற்கு வந்தது. அவனது நண்பன் கௌஷிக் தன் காதலியின் தோழியை கரக்ட் பண்ணிவிட்டதை பெருமையாக பேசினான். இதுலாம் தப்பில்லையா டா என்று கேட்ட அஜய்யை கிண்டலடித்தான்.

டேய் தயிர் சாதம், பின்ன உன்ன போல பொண்ணுங்கள கண்டாலே ஓடுற சாமியாரா நானு… இது வர ஒரு பொண்ணோட நகத்தையாச்சு தொட்ருப்பயா…நீலாம் சுத்த வேஸ்ட்ரா… டேய் முடிஞ்சா ஒரே ஒரு பொண்ண கரக்ட் பண்ணி காட்ரா…என்று சும்மா இருந்தவனை சீண்டிவிட்டான்.

ஏன் எனக்குலாம் பொண்ணு செட் ஆவாதா, மடக்கி காட்றேன் டா என்று வீறு கொண்டு எழுந்துவிட்டான் நாயகன். இவைகளை அசைபோட்ட படி வந்தவனை கைகாட்டி நிறுத்தினாள் அவள்… நல்ல உயரம், உடலமைப்பு, அதை எடுத்து காட்டும் உடையமைப்பு என பளிங்காக இருந்தாள்.

ஆகா… சிக்கிருச்சு டா என்று குஷியாகிவிட்டான் அஜய். இருவரும் கொஞ்சதூரம் பயணித்தபின் இடது பக்கம் திரும்பி ஒரு இடத்தில் நிறுத்த சொன்னால். அஜய்யை மையலாக பார்த்துக்கொண்டே அவளிறங்கி நடக்க, மந்திரித்து விட்ட கோழியாய் அவள் பின்னே இவன். ஒரு மறைவுக்குள் சென்று வெளிவந்தவளை பார்த்து,

ஹே, என்ன ஆரம்பம் நயன்தாரா போல வருவனு பாத்தா அறம் நயன்தாரா போல வர, என்று கேட்க…

அவள் வில்லங்கமாய் சிரித்தபோது தான் அஜய்க்கு லேசாய் அலாரமடித்தது.

பிறகும் அவளெதுவும் பேசாமல் புடவை மறைப்பில் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை அஜய் தலையில் வைத்தபோது சர்வம் நடுங்கிபோனது.

நிதானமாக வாய் திறந்தால் “கைல இருக்கற பணம், நகை னு எல்லாத்தையும் எடுத்து வை” என்று

அவனோட்டி வந்த வண்டி வரை அவளிடம் அடகுவைத்த பின் அவன் மனதில் ஒரு கேள்வி…

நாம நெஜமாவே தயிர் சாதம் தானோ* :joy::joy::joy:

3 Likes

“டேய் நில்லுடா ஒரு அடி நகர்ந்த இந்த துப்பாக்கியால சுட்டுடுவேன்”. என்றாள் வேணி.

“போடி என்னால முடியாது நீ வேணும்னா அந்த துப்பாக்கியில சுட்டுக்கோ” என்றான் வாசன்.

“இப்ப நீங்க இரண்டு பேரும் அடங்கல நான் உங்கள சுட்டுடுவேன் பார்துதுக்கோங்க அதுவும் தோசை கரண்டியில” என்றார் அவர்களின் தாயார்.

அடுப்படியிலிருந்து வந்த குரலால் இருவரும் கப்சிப்…

மறுபடியும் "வாசன் ஒழுங்கா அதை கொடு இல்லன்னா நீ காலி ".

" முடியாது என்ன பண்ணவ ஒழுங்கா ஒடி போ… நீ போலீஸா இருக்கலாம் அதுக்காக என் துப்பாக்கிய நான் தர மாட்டேன் ".

டேய் என்று கத்தியவளின் தலையில் நங்கென்று விழுந்தது ஒரு குட்டு… தேய்த்தபடியே திரும்பி பார்த்தவளின் கண்களுக்கு பத்ரகாளியாய் அவளின் அம்மா தான் தெரிந்தார்…

" அம்மா அந்த துப்பாக்கிய என்கிட்ட கொடுக்க சொல்லுமா… கொடுக்கவே மாட்டேன்றான் கடன்காரன் ".

" ஏன்டி அறிவிருக்கா இல்லையா உங்களுக்கு? நீ ஏ. சி. பி… அவன் இப்ப ஐ. பி. எஸ் டிரெயினிங் போயிட்டு இருக்கான்… ஆனா குழந்தை மாதிரி தீபாவளி துப்பாக்கிக்கு சண்டை போடுறீங்க… முண்டங்களா… "

வேணி," அம்மா அவன் வச்சி இருக்க துப்பாக்கி கலர் நல்லா இருக்குமா… ஒழுங்கா வாங்கி தா.

வாசன், “முடியாது… நீ வேணும்னா வேற வாங்கிக்கோ… என் துப்பாக்கில கை வச்ச நீ காலி.”

இதுங்க சண்டை முடியாதுன்னு நின்னைச்ச அம்மா நேரா அடுப்படிக்கு சென்று தோசை கரண்டியோடு வந்ததும் இரண்டு பேரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளின்னு வானத்தைப் போல டிரக்கை மாற்றி பாடிக்கொண்டே ஓடி விட்டார்கள்… இல்லைன்னா அடி கன்பார்ம்ல…

எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அம்மாவின் தோசை கரண்டிக்கு பயப்படாத ஆள் யாராவது இருக்கீங்களா?

4 Likes

Ha ha, semma baby…

:grin::grin::grin::grin:Thanks anjuma

1 Like