படம் பார்த்து கதை சொல் 6

படம் பார்த்து கதை சொல் 6
0

16

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும்,ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

போன முறை உங்களோட திறமையைப் பார்த்து நான் வியந்து போயிட்டேன்.இந்த முறையும் உங்களோட கதைகளை படிக்கவும் , கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன். இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

இதோ இன்று அந்த திரையரங்கத்தின் வாசலில் தனக்காக காத்திருக்கிறது ஒரு பெரும் கூட்டம்… அன்று இந்த அரங்கின் வாசலில் கூட அனுமதிக்காதவர்கள் இன்று மரியாதையுடன் வரவேற்றனர்… இதெல்லாம் எதனால் நான் நாயகி என்பதால் மட்டும் தானே? எத்தனை வேதனைகள் இந்த இடத்தை அடைய… பெற்றவர்கள் கூட தன்னை ஒதுக்கிய காலம் தான் அது… திரையரங்கில் தன்னுடைய மூன்றாவது படம் திரையிட இருக்கிறது அதன் சிறப்பு காட்சிக்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டம்…

ஏனோ இன்று அவளால் தன் படத்தை ரசிக்க இயலவில்லை… கடந்த காலத்தை எண்ண சொல்லி மனம் உந்த அதை நோக்கி நினைவுகள் செல்ல தொடங்கியது…

ரேகா, இயல்பிலே அழகு ஆனால் தன்னை மேலும் அழகுப்படுத்தி கொள்ள அவளுக்கு பிடிக்கும்… சினிமா என்றால் உயிர்… ஒரு படத்தை கூட விடமாட்டாள் அடியும் உதையும் வாங்கி கொண்டு திருட்டுத்தனமாக கூட சில நேரங்களில் சென்று வருவதுண்டு… காரணம் அவள் தந்தைக்கு சினிமா மா என்றாலே பிடிக்காது அன்னைக்கும் தான்…

ஒருநாள் மேடை நாடகத்தில் நடத்த அவளை ஊரே பாராட்டியது ஆனால் அவள் பெற்றோர்கள் அதன் பிறகு அவளை வீட்டுற்குள் பூட்டி வைத்தனர்… நாட்கள் நகர அவளின் சினமா கனவு மட்டும் மறையவில்லை… அவ்வூரில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை கேள்விபட்டவளால் வீட்டுற்குள் அடைந்து கிடக்க முடியவில்லை… பின் கட்டு வழியாக சுவர் ஏறி குதித்து அங்கு சென்று விட்டாள்…

அக்கம் பக்கத்தினர் அவளை பார்த்து விட்டு பெற்றோர்களிடம் சொல்ல அவளை வீட்டுற்குள் அனுமதிக்க மறுத்தனர்…

பிடித்த சினிமாவை தேடி சென்னை வந்தாள்… ஐந்து வருடம் பித்து பிடித்தவள் போல் வீதி வீதியாக அலைந்தாள்… இவள் தினமும் வருவதை பார்த்த ஒரு இயக்குனர் என்னவென்று விசாரிக்க நல்ல உள்ளம் படைத்த அவர் தன் படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பளித்தார்… இவள் நேரமோ என்னவோ அந்த கதையின் நாயகி படத்தின் பாதியில் நின்றுவிட அந்த திமிர் பிடித்த நாயகியிடம் தோற்க விரும்பாத இயக்குனர் ரேகாவை வைத்து அப்படத்தினை முடித்தார்… யாரும் எதிர்பாராத வகையில் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது… அது முதல் ரேகாவிற்கு ஏறு முகம் தான்…

நினைவுகளிலிருந்து மீண்டவள் இதோ அடுத்த படத்திற்கான போட்டோ ஷுட்டிற்கு வந்துவிட்டாள்… அவள் வாழ்க்கையில் ஆசைப்பட்டதை எட்டி பிடித்து விட்டாள்…

1 Like