படம் பார்த்து கதை சொல் 8

படம் பார்த்து கதை சொல் 8
0

B612_20191007_131201_953

ஹாய் மக்களே,
நான் அடுத்த படத்தோட வந்துட்டேன். லீவு நாளில் கூட எங்களை நிம்மதியா இருக்க விட மாட்டியா அப்படின்னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.

இந்த படத்தை பார்த்ததும் உங்க மனசில் தோணுற கதையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் கற்பனை வளத்தையும், வார்த்தைகளின் ஜாலத்தையும் பார்க்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேன் மக்களே.

1 Like

உழைத்து கலைத்து வீட்டிற்கு உணவு உண்ண வரப்போகும் தன் மாமனை எண்ணி தன்னை அழகுப்படுத்தி கொண்டு இருந்தாள் வைதேகி…

அந்த நேரம் கைபேசி அழைக்கவே யாரேன்று பார்க்க தன் ஆசை மாமனே அழைக்கிறான் என்று அறிந்த அடுத்த நொடி அழைப்பை ஏற்றாள்…

“என்ன மாமா இந்த நேரம் போன் பண்ணி இருக்கீங்க? வீட்டுக்கு எப்ப வருவீங்க”?

"தங்கம் இன்னைக்கு வயல்ல கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு… நான் இங்க இருக்கறதையே சாப்பிட்டுக்கிறேன்… நீ எனக்காக காத்துகிடக்காம சாப்பிட்டு இரு… நான் சாயந்திரம் போல வரேன்… என்ன சரியா? ".

அவனுக்கு ஹம் என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு அமர்ந்திருந்தவளுக்கு தீடீரென ஒரு யோசனை ‘தான் ஏன் வயலுக்கு சாப்பாடு எடுத்து செல்ல கூடாது’ என்பதே அது…

அடுத்த நிமிடம் பரப்பரவென்று அவனுக்கு அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு புறப்பட்டு விட்டாள்…

வயலுக்கு சென்றவள் தன் மாமனை தேட அவனோ வேலையின் அசதியால் உறங்கி கொண்டு இருந்தான்… அதை கண்டவளோ அவனை சீண்ட எண்ணி சத்தமிடாமல் அவன் காதருகே சிறு புல்லினை எடுத்து கூசச்செய்தாள்… அதில் திடுக்கிட்டு எழுந்தவன் தன் எதிரில் தன் மனைவி இருப்பதை கண்டதும் அவ்வளவு மகிழ்ச்சி…

“என்ன என் தங்கம் இங்க வந்து இருக்கீங்க? மாமனை பார்க்காம இருக்க முடியலையோ?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… இந்த வழியா கடைக்கு வந்தேன்… அதான் அப்படியே சாப்பாட்டை கொடுத்துட்டு போகலாம்ன்னு…”

அவனோ சிரித்துக் கொண்டே "ஓஓ இந்த பக்கம் கடை இருக்குன்னு நீ சொல்லி தான் எனக்கு தெரியுது பாரேன்… "

கண்டுகொண்டாரே என்று அதில் வெட்கம் கொண்டவளின் முகமோ அந்தி வானமாய் சிவந்தது…

1 Like