படம் பார்த்து கதை சொல் 9

படம் பார்த்து கதை சொல் 9
0

68558468_460981381422105_1368386974326456320_n

ஹாய் மக்களே,
நான் அடுத்த படத்தோட வந்துட்டேன். இந்த படத்தை பார்த்ததும் உங்க மனசில் தோணுற கதையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் கற்பனை வளத்தையும், வார்த்தைகளின் ஜாலத்தையும் பார்க்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேன் மக்களே.

1 Like

அந்தப் பெரிய மாளிகையில் எல்லோரும் நித்திரா தேவியின் மடியில் மடிந்து கிடந்த நள்ளிரவு நேரத்தில், அலங்காரப் பதுமை போல இருந்த, ஒருத்தி மட்டும் பதுங்கிப் பதுங்கிச் சமையற் கட்டுப் பக்கத்திற்குப் போய்க் கொண்டிருந்தாள்…
அவளின் மனசெங்கும் மாறனின் மாசற்ற மலர்முகம் மட்டும் தான் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது, எப்படியும் அவனிடம் இப்பொழுது போயாக வேண்டும் என்ற அதே நினைப்புடன், தன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு, சத்தம் எழுப்பாமல் வெளியில் செல்ல வாசலைப் பார்த்தவள் அந்த வழியில் செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, வீட்டின் பின்புறம் சாளரத்தின் வழியாகத் தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கீழே இறங்கத் தொடங்கினாள்…
இராத்திரிப் பொழுதும், இறங்குவதை யாரும் பார்க்க கூடாது என்ற பதற்றமும் சேர்ந்து அவள் இதயத்தைப் படபடக்கச் செய்து கொண்டிருந்தது…
கீழே இறங்கி இருள் மறைவில் நின்றிருந்தவனை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்… மடியில் அன்று தனது வீட்டில் செய்த பலகாரங்களை, தன்னை வெறுக்கும் யாருக்கும் தெரியாமல், தனக்கு உண்ணக் கொடுப்பதற்காகக் கனமாகக் கட்டிக் கொண்டு தன் கனகாம்பரி அக்கா வருவதைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மாறன் என்ற அந்த வீட்டு வேலைக்கார ஏழைச் சிறுவன்… :+1::+1::+1:

“ஒரு நேசமேகம் உயிர்த் தீண்டும் நேரம் நான் மெதுவாய்க் கரைய
இவள் பாசப் பார்வை என்னில் வாழும் போது
நான் அழகாய்த் தொலைய…”

(முதல் தடவையாக எழுதிறேன் அக்காச்சி தவறுகள் இருந்தால் உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு திட்டலாம் பேசலாம் அக்காச்சி :blush::blush::blush:)

2 Likes

அத்தனை நாள் மறைத்து வைத்ததை இனிமேலும் மறைக்க இயலும் என்று தோன்றவில்லை…

தினம் தினம் பதறும் மனதை…, ஆசை கொள்ளும் நெஞ்சை, அடையத் துடிக்கும் கைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என புரியவில்லை… சும்மாவே வகுப்பில் சக மாணவர்களுடன் பழக கூச்சம் வேறு படுத்தி எடுக்க… யாருடனும் சேராமல் ஒதுங்கி சில வருடங்கள் ஆகிவிட்டன…

நட்புக்களுக்காக மனம் ஏங்கினாலும், ஆண்களை காண கூச்சம்… இதில் அவர்கள் அருகிலேயே அமர்ந்து பாடம் கவனிக்க வேண்டுமானால் எவ்வளவு சங்கடம்.?

அதற்கு மேலும் அவர்கள் தொட்டு பேசினால் இவன் உடல் தூக்கிப் போட்டது… அதனால் நண்பர்களை எல்லாம் ஒதுக்கி வைத்து தனியாக அமர பழகிக் கொண்டான்…

ஆனாலும், பெண் பிள்ளைகளை காணும் போது மனம் ஏங்கும்… அவர்களில் யாராவது அழகிய ஆடையில் வந்தால், அதை அப்போதே பறித்துக் கொள்ள மனம் துடிக்கும்…

இன்று கூட செமினார் எடுத்த செல்சியா அவளது அழகான விரல்களில் கத்தரிப்பூ வண்ண நகச் சாயத்தை பூசியிருந்தாள்…

தனித்துவமான கலர் அது…!! அந்த நிறத்தில் நகச்சாயம் மட்டுமல்ல எதுவும் கிடைப்பது கொஞ்சம் அபூர்வம் தான்… அவளிடம் அப்போதே சென்று அந்த நகச்சாய புட்டியை வாங்கிவிட வேண்டுமென்ற பைத்தியமே பிடித்துவிட்டது அவனுக்கு…

தன்னை கட்டுப்படுத்த இயலாது வகுப்பில் இருந்து வெளியேறிவிட்டான்… வீட்டிற்கு வந்தால்… அக்காவின் திருமணத்திற்கென அழகழகான ஆடைகள்…, நகைகள் என வீடெல்லாம் நிறைத்து வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள் அக்காவும் அம்மாவும்…

அந்த ஆரஞ்சு வண்ண லெஹங்காவை பார்த்ததும் மீண்டும் அவனுக்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது…

யாருக்கும் தெரியாமல் அதை கைகளில் சுருட்டி எடுத்தவன் தனதறைக்குச் சென்று அதை ஆசை தீர அணிந்து அழகு பார்த்தான்(ள்)…

கடவுள் தன்னை எப்படி இப்படி படைத்தர்? ஏன் தனக்கு மட்டும் இப்படியான நிலை என தினமும் போலவே அன்றும் மனம் அலைப்புற… கீழே புரண்டு அழ ஆரம்பித்தாள்…

பின் சுயநினைவை அடைந்து பார்த்தால், மொத்த உடையும் கசங்கி இருந்தது… அக்காவின் திருமண உடை…!! அய்யோ இப்போது என்ன செய்வது என திகைக்கும் போதே படீரென அறைக்கதவை திறந்து உள்ளே வந்த அவனது அன்னை அவனைக் கண்டு அதிர்ச்சியில் அப்படியே தரையில் சரிந்தாள்…!!

சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தையோ தலையில் அடித்துக் கொண்டு கதறினார்… இவன் பயந்து போய் மூலையில் முடங்கினான்… இத்தனை நாள் கட்டிக்காத்த ரகசியம் ஒரு நொடியில் உடைந்துவிட… என்ன செய்வதென அறியாது திகைத்தான்(ள்)

மனதில் பயப்பந்து உருண்டு ஓடியது… சட்டென சுதாரித்த தந்தை அழுகையை அடக்கியவர் வேகமாக சென்று வீட்டுக்கதவை சாத்தி விட்டு வந்தார்…

“டேய் இங்க பாரு… இது எத்தன நாளா இப்டி?”…

" ரெண்டு வருசமாவே எனக்கு இப்டி தான் பா தோணுது… நான் பையன் இல்ல பொண்ணுன்னு என் உள் மனசு அடிச்சிக்குது பா…" என கதறினான்…

தலையில் அடித்துக் கொண்டவர்… "இதோ பார்…இந்த ரெண்டு வருசமா எப்படி மறைச்சிக்கிட்டு இருந்தியோ அதே மாதிரி இன்னும் ஒரு ரெண்டு வாரம் இருந்துக்கோ…

இல்லன்னா, என் மக கல்யாணம் கெட்டுப் போயிடும்… அவ வாழ்க்கை அழிஞ்சி போயிரக் கூடாது… அதனால கொஞ்ச நாளைக்கு இந்த ரூமுக்குள்ளயே இரு … உன் காலுல வேணும்னா விழுறேன்…" என கதறினார்…

“அய்யோ… இல்லப்பா… நான் என்னப்பா செய்வேன்… நான்… என்னால அக்கா கல்யாணம் நிக்காதுப்பா… ஆனா, இந்த ட்ரஸ் எல்லாம் பாக்கும் போது என்னய அறியாம அத எடுத்துப் போட்டுக்கனும்னு தோணுதுப்பா… நான் என்னப்பா செய்வேன்…” என கதறினா(ள்)ன்…

“அப்போ அவ கல்யாணம் முடியிற வர இந்த ரூம் விட்டு வெளிய வராதே” என்றவர் அவனை உள்ளே போட்டு அடைத்து விட்டு சென்றுவிட்டார்…

அவனது உணர்வுகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை… அங்கே வயதுப் பெண்ணின் திருமணத்திற்கு முன்னால் இவள(ன)து உணர்வுகளோ, வாழ்வோ பெரிதாக மதிக்கப்படாமல் போனது…

ஆயிற்று இவனை முகூர்த்த நேரத்தில் மட்டுமே அவர்கள் கண்களில் காட்டி எப்படியோ சமாளித்து திருமணத்தை நடத்தி முடித்தார்…

அக்காவின் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட…, இதற்கு மேலும் இப்படி அறையில் அடைந்து கிடப்பது இயலாது என்ற முடிவிற்கு வந்தான் சுந்தரன்… சுந்தரனாக இருந்த சுந்தரி…!!

தனது அக்காவின் அழகழகான ஆடைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டவள் அவளது புடவையில் ஒன்றை எடுத்து அழகாய் கட்டிக் கொண்டு நட்ட நடு இரவில் வீட்டின் பைப் லைனை பிடித்து கீழிறங்கி…

சொந்த வீட்டிலிருந்தே தப்பித்து… தனக்கான வழியை தேடி நள்ளிரவில் நடையை கட்டினாள் சுந்தரி…!! அவளுக்கான வாழ்வு முற்களால் நிறைந்ததாக இருக்கலாம்…

மனிதர்களின் மனதில் மனிதம் மரணித்துக் காலத்தில் அவளைப் போல பிறந்தவர்க்ள் அனைவருக்கும் இதே கதி தான்…!!

3 Likes

Evargalai pola piranthavargalin valkai sollonna thuyarathileye ullathu…avargalukum vidivu pirakkum endra nambikaiil…kathai arumai…

2 Likes

Muthal muyarchinu solla mudiyatha alavuku erukuthu. Romba arumai

2 Likes

அம்மா என்ன பார்த்தா முதல் முயற்சி செஞ்ச பிள்ள மாதிரியா தெரிது? இன்பாக்ஸ் வாங்க… உங்களுக்கு இருக்கு… டூ பேட் சுலோ மா